16830 பதிற்றுப்பத்து வசனம்.

ந.சி.கந்தையாபிள்ளை. யாழ்ப்பாணம்: ந.சி.கந்தையா, தமிழ் நிலையம், நவாலியூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1937. (சென்னை (மதராஸ்): ஒற்றுமை ஆபீஸ், இல.8, வியாசராவ் தெரு, தியாகராய நகர்).

xi, (4), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13.5 சமீ.

சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப் பத்து சேர அரசரின் கீர்த்திப் பிரதாபங்களைக் கூறுகின்றது. சேர அரசர் பலரின் சரித்திரங்களை அறிவதற்கு இந்நூல் துணைபுரிகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு எவ்வகையான நாகரிகம் அடைந்திருந்ததென்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. உள்ளதை உள்ளவாறே கூறும் மெய்ம்மொழிப் புலவர்கள், ஆறு, மலை, சோலை, காடு முதலியவற்றின் வளங்களும், மக்களின் நடை, உடை, பாவனைகளும், வேந்தரின் மாட மாளிகை கூடகோபுரம், நாடு, நகரம், முடி, கொடி, குடை, ஆலவட்டம், தேர், யானை குதிரை, காலாள், போர்க்களம், பாசறை ஆதியனவும் பிறவும் நமது மனக்கண்ணுக்கு இனிதே புலப்படுமாறு தமது பாடல்களாகிய திரையில் அழகுபெறச் சித்திரித்திருக்கின்றனர். பதிற்றுப்பத்தில் பல வழக்கிழந்த சொற்கள் காணப்படுவதால் அந்நூலை எளிதிற் பொருள் விளங்கிப் பயில்தல் அரிதாகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு ஆசிரியர் இவ்வசன நூலை எளிய வடிவில் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0602).

ஏனைய பதிவுகள்

Starburst Pharaoh slot Gokkas Review

Volume Watje Bedragen Starburst? Voor Kennismaken In Een Gokkas Van Netent Speel Starburst Erbij: Film Gokkasten De spelle, zowel welnu offlin videoslots, bedragen noppes meertje