கருணாகரன். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
322 பக்கம், விலை: இந்திய ரூபா 330., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-960544-2-7.
இந்நூலிலுள்ள கட்டுரைகள், 20இற்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைத் தொகுதிகளைக் குறித்துப் பேசுகின்றன. இதில் இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க் கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வ மக்களின் கவிதைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. அலைவின் முகம், பெண்ணுடலைக் கொண்டாடுதல், கட்டற்ற கவிஞன் லார்க், திரைகளை விலக்க ஒரு பயணம்: சிங்கள மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பற்றி, றியாஸ் குரானாவின் கற்பனைச் செயல், விடுதலை அரசியலின் உக்கிரம், கீழெது? மேலெது?, வெளி தேடி அலையும் பறவை, புதிதளித்தலையும் பகிர்ந்தளித்தலையும் நிகழ்த்தும் பைசலின் கவிதைகள், யாருக்கும் இல்லாத பாலை, பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்), சுமதியின் கவிதை வழி, தேடிச்செல்லும் வழியில் கண்ட திசை, பரதேசிகளின் பாடல்கள்: முகமற்ற கவிஞர்களின் கவிதைகள், ஒலிரும் ஓசையும் இயல்பின் மொழியுமாய் விரிதல், புதிய உணர்முறையிலான சித்தாந்தன் கவிதைகள், தொன்மத்தின் வழி நிகழ்காலம், தமிழ்நதி கவிதைகள், புதிய சுவடுகளுக்கு ஒளி அதிகம், பதுங்குகுழியின் பாடல்கள், சமனிலையை விரும்பும் கவி, துயர்வெளிக் கவியின் வேரோடிய நிலம், கொந்தளிக்கும் வாழ்க்கையின் நிழல், உண்மையின் தீராத தாகம், உள்ளமைதியும் மேற்சிறகிசைப்பும், துயர்மேடை, நீர்மேட்டில் தழும்பும் இலை, இனி?: நெற்கெழுதாசனின் கவிதைகள், கேள்விகளும் சிந்தனைகளும், முன்னும் பின்னுமாய் காலம், தமயந்தியின் “சூரியப் பூச்சிகள்”, உமா மகேஸ்வரியின் கற்பாவை, துரத்தும் நிழல்களின் உக்கிரம், பெண் மொழி-பெண் வழி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 34 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.