16835 சட்டநாதன் கட்டுரைகள்: பலதும் பத்தும்.

க.சட்டநாதன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 244 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-5881-05-5.

ஈழத்தின் முக்கிய தமிழ் இலக்கியவாதியான க.சட்டநாதன் அவர்கள் எழுதிய சமகால இலக்கியக்; கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் மு.தளையசிங்கம் எனும் வியக்தியும் அவரது சிறுகதைகளும், மு.த.வின் கலிபுராணம், தர்மோ ஜீவராம் பிரமிள் ஒரு படைப்பாளுமை, மோகன் ராகேஷின் அரையும் குறையும், செங்கை ஆழியானின் புனைவும் வாழ்வும், குந்தவையின் யதார்த்தமும் புனைவும், ஊர்வசியும் அனுபவமும் கலையும், உள்மன யாத்திரை ஒரு நோக்கு, சண்முகனின் “ஒரு தோட்டத்தின் கதை”த் தொகுதியும் சிறுகதைகளும், குப்பிழான் ஐ.சண்முகன் அவர்களது அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புகள், பத்தி எழுத்துகள் திரட்டுப் பற்றிய கருத்துரை, பரணீயின் யதார்த்தமான புனைவுகள், செ.யோகநாதனின் படைப்பு வல்லபம், ஆழத்தை அறியும் பயணம் கடவுளரும் மனிதரும், பரராஜசிங்கத்தின் படைப்புலகம், பதிவுகள் ஓர் அறிமுகம், பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புவெளி, முரண் சிறுகதைகளின் அகமும் புறமும், அசோகமித்திரனுக்கு விருது, தேவகாந்தனின் படைப்பும் வீச்சும், தேவகாந்தனின் யுத்தத்தின் முதலாம் அதிகாரம்-நாவல், ஆளுமை மிக்க கலைஞன் ஆனந்தமயில், காவல்வேலி கதை நிகழ்களங்கள், ஈழத்து எழுத்துப் பரப்பில் புதியவர்களின் படைப்பு மொழி, சிறுகதை என்னும் புனைவிலக்கியம், சினிமா: சில பதிவுகள், தமிழ் சினிமாவில் சில வித்தியாசமான முயற்சிகள், நவீன தமிழ் இலக்கியம்: புனைகதை ஒரு முன்னுரை, அகாலத்தில் மறைந்த செ.கதிர்காமநாதன், டெரரிஸ்ட்: சினிமா சில பதிவுகள், ஜெயகாந்தன் படைப்புகள்-சிறுகதை, இரு முழுநீளத் திரைப்படங்களும் சில குறும்படங்களும், அம்மா வந்தாள்- பிடித்த புத்தகம், சினிமா-சில பதிவுகள், ஜி.ரி.கேதாரநாதனின் ”சினிமாத் தடம்”, பூரணி இதழ்- ஆசிரியர் தலையங்கங்கள், தூண்டில் நேர்காணல், ஜீவநதி நேர்காணல் ஆகிய 37 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன  இந்நூல் 190 ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Czatuj

Content Online mahjong 88 – Używaj zaszyfrowanej przeglądarki Lub wolno anonimowo zameldować na policję podejrzane czynu w wnętrza publicznej? Najistotniejsze anonimowe konta bankowego mailowe Korzystaj