16838 தெணியானின் படைப்புகள் மீதான பார்வைகள்.

க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

viii, 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-02-2.

தெணியானின் 50 வருடகால எழுத்துலக வாழ்வை கௌரவிக்கும் வகையில் அவரது நூலுருப்பெற்ற நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள் குறுநாவல்கள் என 15 நூல்களைப் பற்றிய ஈழத்தின் படைப்பாளிகளிடம் இருந்து பெறப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. மீண்டும் வாசிக்கையில் தெணியானின் ”காத்திருப்பு” (எம்.கே.முருகானந்தன்), ”சிதைவுகள்” நுலினூடே தெணியான் பற்றிய எனது தரிசனம் (புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்), பரந்த உரையாடலுக்கு உகந்த களம் தெணியானின் ”இன்னொரு புதிய கோணம்” (க.நவம்), தனித்துவப் பதிவாகத் திகழும் ”சொத்து” (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), தெணியானின் ”தவறிப்போனவன் கதை” கடந்து வந்த யதார்த்தத்தின் சாட்சியக் குரல் (மேமன் கவி), தெணியானின் ‘இன்னும் சொல்லாதவை” (முருகபூபதி), தெணியானின் ”விடிவை நோக்கி”: சில மனப்பதிவுகள் (அ.பௌநந்தி), ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் ”மரக்கொக்கு”: சில அவதானிப்புகள் (செ.யோகராசா), தெணியானின் ”நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி” (கி.விசாகரூபன்), தெணியானின் ”ஒடுக்கப்பட்டவர்கள்” ஒரு சுருக்கமான விமர்சனக் குறிப்பு (லெனின் மதிவானம்), ”கழுகுகள்” மீதான ஒரு பார்வை (தாட்சாயணி), தெணியானின் ‘கானலின் மான்”: ஆளுமை உளவியல் வழியே ஒரு மீள்பார்வை (த.கலாமணி), தெணியானின் ”பனையின் நிழல்” (தம்ப சிவா), தெணியானின் ”பொற்சிறையில் வாடும் புனிதர்கள்” நாவல் குறித்த மனப்பதிவு (மு.அநாதரட்சகன்), விரியத் துடிக்கும் சமூக, பண்பாட்டு வரலாற்றுப் பதிவுகளாய் தெணியானின் சிறுகதைகள்: ”மாத்துவேட்டி” குறித்த ஒரு பார்வை (இ.இராஜேஸ்கண்ணன்) ஆகிய 15 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 19ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Dominance 1 Put Casino Slots

Posts Downsides From 80 100 percent free Spins Mega Moolah Bonus Precisely what do I have to Join During the Spin Casino? How can i