16839 பிரமிள் கவிதைகள் ஒரு நுண்ணிய உசாவல்.

ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

42 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-42-0.

வடிவமும் கட்டமைப்பும் நன்கு அமைந்திருக்க, இறுக்கமும் செறிவும் அடர்ந்திருக்க, சொற்சிக்கனம் அமைய, மென் இசை நயம் இழையோட, ஆகர்ஷ தனிக் கவிதை மொழியோடு மரபிலக்கிய சீர்பிரிப்புப் போல வரிகள் கொண்ட பிரமிளின் கவிதைகள் செவ்வியல் தன்மை பெற்றவை. பிரமிளின் கவிதைகளில் தனித்த நுட்பமான சொற்களில் ஒரு ரம்ய மாய உலகம் கட்டப்படுகிறது. படிமங்களின் துணைகொண்டு கவிதைகள் காட்சிரூபத்தில் மாற்றப்படுகின்றன. ‘பௌதிக யதார்த்தத்தை மீறிய நிதர்சனங்களைப் பற்றிய விசாரமயமான பிரமிப்புகளின் வெளிப்பாடுகளே கவிதைகள்” என்று கூறும் பிரமிள், கவிதையின் இயல்பான தோற்றத்தையும் அதன் மூலசக்தியையும் தன் அழகியல் கவித்துவ தரிசனத்தால் வெளிக்கொணர்ந்தவர் என்பது வெள்ளிடைமலை. அவரது கவிதைகள் பற்றிய ஒரு ஆழமான ஆய்வாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 222 ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Undersöka Ultimata Casinon Online

Content Säkerheten På Nya Online Casinon Utanför Sverige – kolla in de här killarna Prova Ansvarsfullt Inte me Konto Frågor Och Genmäle I Casinon 2023