16840 வலியும் வழியுமாக: கவிஞர் சோ.பத்மநாதன் கவிதைகள்.

அ.பௌநந்தி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 86 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-29-1

ஈழத்துத் தமிழ்க் கவிதைப் படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவரான கவிஞர் சோ.பத்மநாதன் (சோ.ப.) கவிதைகளில் ஈழத் தமிழ்மக்களின் ஒரு காலகட்டத்து வாழ்வியலைத் தரிசிக்க முடிகின்றது. இன ஒடுக்குமுறை, அதனால் ஏற்பட்ட போர் பற்றி மட்டுமின்றி அவற்றின் அழிவுகளையும் துயரங்களையும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும் கவிதைகளைப் படைத்துள்ளார். அவரது கவிதைகளில் பாடப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமின்றி கையாளப்பட்ட உத்திகளும் வாசகர் நெஞ்சைப் படைப்போடு பிணைத்து வைத்திருக்கும் திறம் வாய்ந்தவை. சோ.ப.அவர்களது ”வடக்கிருத்தல்” (1998), ”நல்லூர் முருகன் காவடிச் சிந்து” (1986) ஆகிய படைப்புகளை முன்வைத்து இந்த ஆய்வுக் கட்டுரை எழுதப்படுகின்றது. விவரண அணுகுமுறையிலும், தேவையான இடங்களில் ஒப்பீட்டு அடிப்படையிலும் அவரது படைப்புகள் பற்றி இவ்வாய்வில் நோக்கப்பட்டுள்ளது. இந்நூல் 215ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14519 பாரதக் கதைகள்.

ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. கொழும்பு: உலக சைவப் பேரவை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). viii, 88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: