16842 இளவேனிற் காலத்து உரையாடல்கள் (நேர்காணல்கள்).

நந்தவனம் சந்திரசேகரன். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை: ஏ.கே. பிரிண்டர்ஸ்).

104 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 19×13 சமீ., ISBN: 978-81-953066-1-9.

இலங்கையில் வவுனியா-சின்னப்புதுக் குளத்தில் பிறந்து கோவில் புதுக்குளத்தில் வளர்ந்து, 1981ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் திருச்சியில் நிரந்தரமாக வசித்துவரும் தனவந்தன் சந்திரசேகரன், நந்தவனம் சந்திரசேகரன் என்ற பெயரால் தமிழர் வாழும் பூமியெங்கும் அறியப்பெற்றவர். ”இனிய நந்தவனம்” என்ற பெயரில் இவர் திருச்சியிலிருந்து 1997ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஒரு கலை, இலக்கியச் சிற்றிதழை மாதாந்தம் நடத்திவருகிறார். 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் “இனிய நந்தவனம்” மாத இதழின் 25ஆம் ஆண்டு விழா 10/01/2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. அவ்வேளை

நந்தவனம் சந்திரசேகரனின் நேர்காணல்/கட்டுரைத் தொகுப்பான “இளவேனிற் காலத்து உரையாடல்கள்” என்ற இந்நூலும் வெளியிடப்பட்டது. இதில் அழகிய ஆவணப் புதையல், வரலாற்றுப் பக்கங்களில் எனது அடையாளம், ஈழ மண்ணிலே பிறந்து தமிழ்நாட்டில் புகழ்பரப்பும் நந்தவனம் சந்திரசேகரன், தமிழக ஊடகங்கள் தமிழைச் சிதைக்கின்றன: ஆங்கில மோகம் தமிழரை ஆட்கொண்டுள்ளது, சிற்றிதழ்கள் தரமான இலக்கியங்களால் பதிவுசெய்யப்படவேண்டும், எழுத்தை நம்பி யாரும் இருக்க முடியாது: நந்தவனம் சந்திரசேகரன் பேட்டி, கற்றுக் கொள்பவனாகவே, வாசகர்கள் வாசிக்கும் பழக்கத்தை விடாமல் தொடரவேண்டும், சிந்திக்க வைத்த சிற்றிதழாளர்களின் ஒன்றுகூடல், நூல் விமர்சனம்: “காகிதப்பூவில் தேன் துளிகள்” நட்டுவைத்திருக்கும் நம்பிக்கை விதைகள், சுவாசிக்கச் சில சிற்றிதழ்கள்-நூல்விமர்சனம், இனிய நந்தவனம்-நூல் விமர்சனம், நண்பன் நூலகம்- நூல் விமர்சனம், இனிய நந்தவனம்-பல்சுவை சிந்தனை இதழ், நண்பன் நூலகம், இனிய நந்தவனம்-உலகத் தமிழர்களின் சஞ்சிகை, இனிய நந்தவனம் பொங்கல் இதழ், நூற்சுவை நுகர்வோம், எனது பார்வையில் இன்றைய யாழ்ப்பாணம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Online Gokhuis Voldoet In Telefoonrekening 2024

Volume Gij Liefste betalen betreffende telefoonrekening Casinos🏆 Zelfbeheersing live schapenhoeder het strafbaar zijn bijgeschreve Indien kwam de dikwijls voor die definiëren spellen nie waarderen jij