ஐயாத்துரை சாந்தன் (மூலம்), ஈஸ்வரநாதபிள்ளை குமரன், தக்சாயினி செல்வகுமார் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2021, (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xxxvi, 940 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ., ISBN: 978-624-5911-08-0.
ஐயாத்துரை சாந்தன் நீண்டகால எழுத்தனுபவமும் ஆளுமையும் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் இவரது ஆக்கங்கள் அவ்வப்போது தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இப்பெருந்தொகுப்பில் அவரது சிறுகதை, குறுங்கதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என ஆக்க இலக்கியத்துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் அவர் எழுதிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பெருந்தொகுப்பில் ஐ.சாந்தனின் படைப்பாக்கங்கள் அறிமுகங்கள்(2), நூன்முகங்கள்(பார்வை, கடுகு, ஒரே ஒரு ஊரிலே, ஒட்டுமா, முளைகள், கிருஷ்ணன் தூது, ஆரைகள், ஒளி சிறந்த நாட்டினிலே, இன்னொரு வெண்ணிரவு, காலங்கள், யாழ் இனிது, ஒரு பிடி மண், எழுதப்பட்ட அத்தியாயங்கள், இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம், சாந்தனின் எழுத்துலகம், பூமியின் மையத்திற்கு ஒரு பயணம், விளிம்பில் உலாவுதல், காட்டு வெளியிடை, சிட்டுக் குருவி, என் முதல் வாத்து, கனவெல்லாம் எதுவாகும், கேண்மை, எழுத்தின் மொழி ஆகிய நூல்களின் முன்னுரைகள், ஆசிரியர் குறிப்புகள் என்பன), சிறுகதைகள்(90), குறுங்கதைகள்(37), குறுநாவல்களும் நெடுங்கதைகளும் (17), பயணக் கட்டுரைகள்(3), நாவல் (ஒட்டுமா), கவிதை(சோவியத் நாடு), கட்டுரைகள்(6), புனைவு ஆக்கங்கள்(6), அநுபவம் (எழுத்தில் வாழ்தல்), நேர்காணல்கள்(4), விமர்சனங்கள்(12), பார்வைகள்(10), தடங்கள்(புகைப்படங்கள், புகைப்பட விளக்கங்கள்), பின்னிணைப்புகள் (நூற்பட்டியல், ஆக்கங்கள் இடம்பெற்ற தொகுப்புகள்) ஆகிய பிரிவுகளின்கீழ் பகுத்துத் தரப்பட்டுள்ளன.