16844 சாரங்கனின் புதையல்கள்: அறிவியற் கட்டுரைகள்-கவிதைகள்.

வைத்தீஸ்வரன் சாரங்கன். தெல்லிப்பழை: மாணவர் மன்றம், யாழ்/மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (மானிப்பாய்: திருச்செல்வி அச்சகம்).

viii, 63 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரும் யாழ். மருத்துவபீட இறுதியாண்டு மாணவருமான அமரர் வைத்தீஸ்வரன் சாரங்கனின் நினைவாக அவரது நண்பர்கள் குழாம் தேடித் தொகுத்துள்ள சாரங்கனின் படைப்புக்களின் நூல்வடிவம் இதுவாகும். 1999 விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயின்ற சாரங்கன் மருத்துவ பீட மாணவனாகத் தெரிவுசெய்யப்பட்டவர். அங்கு தன் மருத்துவக் கல்வியின் இறுதியாண்டைப் பூர்த்தி செய்யாத நிலையில் 20.08.2010 அன்று அகால மரணமடைந்துவிட்டார். பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில் தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்ட இவர் பல்வேறு ஊடகங்களிலும் தன் கவிதைகளை வெளியிட்டிருந்தார்.  ”வரை” என்ற மாதாந்த அறிவில் சஞ்சிகையின் துணை ஆசிரியராக இருந்து பல அறிவில் கட்டுரைகளையும் பல்சுவை விடயங்களையும் தொகுத்து வழங்கியிருந்தார். இந்நூல் அப்படைப்பாக்கங்களின் தொகுப்பாகும்.

ஏனைய பதிவுகள்