16846 பறவைகள்.

மாலினி அரவிந்தன். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (சென்னை: கப்பிட்டல் பிரிண்டர்ஸ்).

xii, 13-160 பக்கம், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-953066-6-4.

யாழ்ப்பாணத்தில் பிறந்த மாலினி, வேம்படி மகளிர் கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று கொழும்பில் மகாராஜா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றியபின் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு சிற்றி குரூப் நிறுவனத்தில் கணக்காளராகவும், பீல் பிராந்திய கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இலக்கியப் படைப்புளைத் தொகுத்து சிறுகதைகள் (பறவைகள், எனக்கொரு சினேகிதி, மௌனமே பேசு, சாந்தியாகிய நான், விதியின் வழியே, தாய் மனசு, விலங்கு, முடி துறந்த கதை, சொந்தம் எப்போதும் தொடர்கதைதான், புளிமாங்காய்), சிறுவர் கதைகள் (கனவு நினைவாக வேண்டும், மர்ம மாலை), கட்டுரைகள் (விண்வெளியில் நடைபயிலும் பெண்கள், வானத்தை ஆளும் பெண்கள், புதியன புகுதலும் பழையன கழிதலும், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சமூக வாழ்வில் கனடியத் தமிழ்ப் பெண்களின் முன்னேற்றம், சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெண்கள், எழுத்தால் உயர்ந்த ராஜம் கிருஷ்ணன், தற்கால சிறுகதை புதினங்களில் காலத்தின் சுவடுகள், தூறல் இதழில் சிறுவர் பகுதி ஆசிரியர் மாலினி அரவிந்தன் தலையங்கங்கள்) ஆகிய மூன்று பிரிவுகளாகப் பிரித்துத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

The telephone Local casino Log on

Articles Perform I need A bonus Password For My personal a hundred No deposit 100 percent free Revolves Bonus? Games Business Out of Totally free