தி.பொன்னம்பலவாணர் (மூலம்), நாகேந்திரம் நவராஜ், தனிநாயகம் அமலதாஸ் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xxiv, 885 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ., ISBN: 978-624-5911-15-8.
பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணரின் படைப்புக்களைத் தொகுத்து இப்பெருநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள படைப்பாக்கங்கள் நூலியல் (காசி காண்டம்), உரையியல் (புட்பவிதி, பறாளை விநாயகர் பள்ளு), தருக்க சங்கிரகத்திற்கான அறிமுகவுரை), பிரசுரவியல் (பிள்ளையார் கதை விளக்கம், சைவ சமயத்தின் சில இனிய சிறப்புகள், திருவாதவூரடிகள் புராண சிந்தனம், முருக விரதம்), சனீஸ்வர வழிபாடு, அவசர அவசிய விண்ணப்பம், ஓம் நமசிவாய உலக சுபீட்ச வங்கி), ஈழநாட்டுக் கட்டுரைகள் (வெள்ளிச் சிந்தனைகள்-77 பதிவுகள், சிறப்புக் கட்டுரைகள்-28 கட்டுரைகள், பாலாவிக் கரையினிலே- திருக்கேதீச்சரம் தொடர்பான 15 ஆக்கங்கள், அந்தத் தமிழகம் நோக்கி- தமிழகப் பின்னணியில் எழுதப்பட்ட 15 ஆக்கங்கள், புதிய புத்தகம்: நூல் அறிமுகங்கள்), ஞானச்சுடர்க் கட்டுரைகள்- 29 ஆக்கங்கள், நல்லைக்குமரன் இதழ்க் கட்டுரைகள்-4 ஆக்கங்கள், சிவதொண்டன் இதழ்க் கட்டுரைகள்- 12 ஆக்கங்கள், கட்டுரையியல் (தமிழியல்- 9 கட்டுரைகள், சமயவியல்- 19 கட்டுரைகள், திருமுறையியல்- 5 கட்டுரைகள், வழிபாட்டியல்- 18 கட்டுரைகள்), விமர்சனவியல்-3 கட்டுரைகள், அணிந்துரையியல் -15 உரைகள்ஆகிய 10 வகுப்புகளின் கீழ் ஆக்கங்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன.