பொ.சண்முகநாதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600004: முருகன் ஆஃப்செட் பிரின்டர்ஸ்).
xviii, 218 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 17×12.5 சமீ.
இலகு வாசிப்பிற்கான கனதி கலந்த செய்திகளையும் குறிப்புகளையும் சுருக்கமாகத் தந்து அதன் பின்னர் சிந்திக்கத் தக்க கருத்துகளையும் எடுத்துக்கொண்ட பொருளுடன் ஒட்டியதாக ஆசிரியர் வழங்கியுள்ளார். இத்தொகுப்பில் 60 சுவையான கட்டுரைகள் உள்ளன. சங்குவேலியைச் சேர்ந்த பொ.சண்முகநாதன் ஈழத்தின் நகைச்சுவை எழுத்தாளர்களின் குறிப்பிடத்தகுந்தவர். 1961இல் தனது முதலாவது நகைச்சுவைக் கட்டுரையை வீரகேசரியில் எழுதியவர். கலைச்செல்வி உள்ளிட்ட பல சிற்றிதழ்களிலும், பத்திரிகைகளிலும் இவரது பல கட்டுரைகள் பின்னாளில் இடம்பெற்றிருந்தன. 2003-2005 காலப்பகுதியில் உதயன் பத்திரிகையில் சண் அங்கிள் என்ற பெயரில் வாராந்தம் பத்தி எழுத்துக்களையும் எழுதிவந்தார். 2008இல் கலாபூஷணம் விருதுபெற்ற இவர் அதே ஆண்டு வலிகாமம் தெற்கு பிரதேச கலாசாரப் பேரவையின் ”ஞான ஏந்தல்” விருதினையும் பின்னர் 2009இல் சுன்னாகம் பிரதேச சபையின் பிரதேச இலக்கிய கர்த்தா கௌரவிப்பின் போது ‘தமிழ்ச்சுடர்” விருதினையும் பெற்றவர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25612).