16850 உடக்கு : பயணக் கதை.

மெலிஞ்சிமுத்தன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

149 பக்கம், விலை: இந்திய ரூபா 130.00, அளவு: 22.5×15 சமீ.

சொந்த தேசத்தில் பிற ஜாதிகளிடம் புழங்க விரும்பாத மனிதர்கள் ஒரு படகிற்குள்ளோ ஒரு குடிலுக்குள்ளோ நீண்ட பயண வாகனத்திற்குள்ளோ திக்கற்று விரியும் வனாந்திரங்களுள்ளோ தம்முடைய வாழ்வை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளை அகதியாய் வந்தடைந்த தேசத்திலிருந்து எழுதிக் காட்டும் சித்திரமிது. தேசங்கள் கண்டங்கள் தாண்டி உயிர்வாழ்தலுக்கான எல்லை கடத்தல்களின் அவஸ்தைகள், துயரங்கள் என பல்வேறு தேசத்தவர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்தவாறு வாசகனை கூடவே அழைத்துச் செல்கிறது மெலிஞ்சி முத்தனின் எழுத்துக்கள். “புனைவுகளில் அகதி வாழ்வை புனைவது போரிலிருந்து தப்பியோடுதலைப் போன்றே அவதியானது. ஆனால் மனித வாழ்வின் பாடுகளை, நாடுகளை மொழிகளை தேசியங்களை கடந்து இன்னொரு தேசத்தில் வசித்து கொண்டு எப்படித்தான் இன்னொரு மனிதரிடம் தன் அனுபவத்தை கடத்துவது என்கிற போதுதான் இப்படியான தற்புனைவு இலக்கிய வகைமைகள் தன் சாளரத்தை திறக்கின்றன” என்ற நீலகண்டனின் நூல் பற்றிய குறிப்பு இந்த நூலுக்கான சுருக்க அறிமுகமாகும். “மரவர்ணமனிதன்” என அடையாளமிட்டவாறு மெக்சிகோவிலிருந்து தன் இறுதி இலக்கான கனடாவின் எல்லைவரை சென்று இறந்து போகும்வரைக்குமான இடைப்பட்ட காலங்களினதும் தூரங்களினதும் கதையாக நகரும் இந்நூல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பிற மனித வாழ்நிலைகள் முக்கியமானவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70076).

ஏனைய பதிவுகள்