பரமசாமி பஞ்சாட்சரம். அவுஸ்திரேலியா: பரமசாமி பஞ்சாட்சரம், 186A, Harrow Road, Auburn 2144, NSW, 1வது பதிப்பு நவம்பர் 2015. (அவுஸ்திரேலியா: டிப்ஸ் பிரின்ட்ஸ்).
256 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-0-9944910-0-8.
ஆசிரியர் மேற்கொண்ட கயிலாச யாத்திரை பற்றிய அனுபவக் குறிப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. கயிலாச மலை, மானசரோவர் ஏரி, கயிலை வரலாறும் நாயன்மார்களும் பெரியார்களும், புனித யாத்திரை, பயணக்கையேடு, தெட்சண கைலாசம்-திருக்கோணமலை, திருக்கயிலாசப் புனித யாத்திரையும் அதன் நிறைவும், திருமுறைகளிற் கயிலாசம் ஆகிய பிரதான தலைப்புகளின் கீழ் பல்வேறு சிறு தலைப்புகளாக வகுத்து இந்நூலை நிறைவுசெய்துள்ளார். பயணக்கையேடு என்ற பிரிவில் ஆசிரியரின் அன்றாட பயண அனுபவங்கள் பத்தொன்பது நாள்களாக வகுத்து அன்றாட அனுபவங்களை பக்தி சிரத்தையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.