குடும்பத்தினர். பருத்தித்துறை: அமரர் ரோகிணி பரராஜசிங்கம் குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
அமரர் ரோகிணி பரராஜசிங்கம் அவர்களின் (30.07.1940-27.04.2022) சிவபதப்பேறு குறித்த 31ஆம் நாள் (27.5.2022) நினைவு மலர். இம்மலரில் தோத்திரப்பாடல், உலக நீதி ஆகிய தொகுப்பைத் தொடர்ந்து சில படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவை நான் கடவுளின் சிவசொரூபமே (சுவாமி யொகேஸ்வரானந்தா), ஆத்மீக வாழ்வின் இரகசியம் (சுவாமி யோகேஸ்வரானந்தா), தன்னலம் கருதா சேவையாளர் (கல்பனா சந்திரசேகர்), திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (என்.செல்வராஜா), Tribute to Mrs Rohini Pararajasingam (யேசுதாசன் கலைச்செல்வன்), நூலகத்தாயே உன்னை சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் (கு.நர்மதா), என் நீங்கா நினைவுகளில் ரோகிணி பரராஜசிங்கம் முன்னாள் நூலகர் (இரா.மகேஸ்வரன்), திருமதி ரோகிணி பரராஜசிங்கத்துடனான சில நினைவுக் குறிப்புகள் (கருணானந்தராஜா), என் நினைவின் பதிவுகளில் (கவிதை-கந்தையா ஸ்ரீமேனன்) ஆகிய பதிவுகளுடன் அமரர் ரோகிணி பரராஜசிங்கம் எழுதியிருந்த Significance of Library Function in the present context, Code of Conduct and Ethos of Library Professionals ஆகிய இரு கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.