16863 ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள் : கட்டுரைகள்.

சண். தவராஜா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சிவராம் ஞாபகார்த்த மன்றம்-சுவிஸ் கிளை, ஊடகவியலாளர் ஒன்றியம், 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

ix, 274 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகார்த்த நிகழ்வினையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு.  மட்டக்களப்பில் 2004 ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவிலாளர் அமரர். நடேசனுடனான மலரும் நினைவுகளை அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த நண்பர்களால் நினைவுகூரப்பெற்று இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது  நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்நூலில் ஞா.குகநாதன் (ஊடகத் துறையில் ஓர் ஆளுமை), இரா.துரைரத்தினம் (மட்டக்களப்பின் வெகுஜன ஊடகத்துறையும் நடேசனின் காலமும்), இ.தயாபரன் (தமிழ்த் தேசியப் பற்றாளராக), பா.அரியநேத்திரன் (அது மகிழ்வானதொரு காலம்), ச.சந்திரபிரகாஷ் (நடேசன் படுகொலையின் நிழற்படச் சாட்சி), பிரசன்னா இந்திரகுமார் (அழியா நினைவில்), சீவகன் பூபாலரட்ணம் (மனிதனாக வாழ்ந்த செய்தியாளன்), அ.சுகுமாரன் (நல்லாட்சியும் உள்ளூர் சுயாட்சியுமே ஜனநாயகத்தின் முதகெலும்பு), எம்.பி.ரவிச்சந்திரா (தமிழ் வரலாற்றுக்குள் வாழ்ந்து வரலாறாகிப் போனவர்), ச.நவநீதன் (நடேசன் இன்னும் வாழ்கிறான்), எஸ்.கே.ராஜென் (ஐ.பீ.சீ. தமிழ் ஊடாக மக்கள் மனம் கவர்ந்த ஊடகர்), கனகரவி (ஊடகத்துறையில் தடம் பதித்த நடேசன்), வி.தேவராஜ் (தமிழ் ஊடகத் துறையினரே நாம் ஒன்றிணைந்தால் எழுவோம். அன்றேல் வீழ்வோம்), அ.நிக்சன் (ஊடகத் தொழிற் தகுதியும் யூ டியூப் தமிழ்த் தொலைக் காட்சிகளும்), சோமிதரன் சிறிதரன் (படுகொலைக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியாய்), மானுடப்பித்தன் (உலகம் உள்ளவரை), திருமலை நவம் (நடேசன் எனும் நட்பு விருட்சம்), தெய்வீகன் (நடேசன்: கொலைநதி தின்ற ஊடகத் தலைமகன்), வே.தவராஜா (ஊடகம் வாழ உயிர்கொடுத்த ஊடகவியலாளன்), இ.பாக்கியராஜா (நெஞ்சுரம் கொண்ட நெல்லை நடேசன்), கோ.கருணாகரம் (நிறைவேறா ஆசையுடன் பறிபோன உயிர்), அகதித் தமிழன் (மானுட விடுதலைக்கான பாதையில் ஊடகங்கள்), கந்தையா தவராஜா (ஒரு யுகபுருஷன்), பரா பிரபா (நடேசன் அண்ணை), வி.மைக்கல் கொலின் (எக்காலத்திலும் பூர்த்தி செய்யப்பட முடியாத வெற்றிடம்), சிவம் பாக்கியநாதன் (ஊடக உலகில் ஒழியா நாமம்), வி.ரி.சகாதேவராஜா (நடேசன் என்றொரு ஊடக ஆளுமை), சீ.ஜெயந்திரகுமார் (நெஞ்சமெல்லாம் நிறைந்த நெல்லை நடேசன்), ஏ.எல்.எம்.சலீம் (உரத்துச் சொன்ன ஊடக நண்பன் நடேசன்), கோ.ரூசாங்கன் (தமிழ் ஊடகவியல் வளர்ச்சிக்கு அவசியமான தொழில்முறைப் பயிற்சியும் தேர்ச்சியும்), எல்.தேவஅதிரன் (நிரப்பப்படமுடியாத வெற்றிடம்), சண் தவராஜா (தன்னை நேசித்தவனை மறந்த மண்) ஆகியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Starburst Xxxtreme Slot Gratis Spelen

Blogs Starburst Slot Rtp Told me Netent Spielautomatenspiele Kostenlos Spielen Delight Discover A place To experience Inside the Reading user reviews Out of Canplay Gambling