16864 நான் கண்ட ஈழத்து நூலக ஆளுமைகள்.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 115 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 680., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6164-29-4.

எம்மிடையே வாழ்ந்து மறைந்த, இப்போதும் வாழ்கின்ற மதிப்பிற்குரிய சில நூலகர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய தகவல்களை இன்றைய நூலகர்களும், நூலகத்துறை மாணவர்களும் அறிந்துகொள்வதால் அவர்கள் தமது நூலகத்துறை சார் வாழ்வையும் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையில் நூலாசிரியர் அறிந்த, தனது நூலக வாழ்வுடன் தொடர்புபட்டிருந்த 13 நூலகர்களின் வாழ்வும் பணியும் பற்றிய தகவல்களை முடிந்தவரை தேடித் தொகுத்து, அவர்களுடனான தனது உறவையும் மீள்நினைவேற்றி, தனித்தனிக் கட்டுரைகளாக இத்தொகுப்பில் வழங்கியுள்ளார். இவை அவ்வப்போது அரங்கம் (லண்டன்), தாய்வீடு (கனடா), தேசம் (லண்டன்) மற்றும் சில புகலிட இதழ்களில் பிரசுரமாகியிருந்தன. தமிழறிஞர் மர்ஹீம் எஸ்.எம்.கமால்தீன்: வாழ்வும் பணிகளும், அமரர் செல்லத்துரை ரூபசிங்கம், கலாநிதி. வே. இ. பாக்கியநாதன்: ஈழத்து நூலகவியல்துறையில் எங்கள் குருநாதர், ரெஜினால்ட் செபரட்ணம் தம்பையா: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகர், ஏழாலை மண்தந்த நூலகர்: அமரர் சிற்றம்பலம் முருகவேள், திருமதி ரோகிணி பரராஜசிங்கம், யாழ். பல்கலைக்கழக நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், M.B.M. பைரூஸ்: ஈழத்து நூலகவியலில் ஒரு மும்மொழிச் சாதனையாளர், சாமுவேல் ஜோன் செல்வராஜா, யாழ். மத்திய கல்லூரி நூலகர் “மாணிக்ஸ்”  என்கின்ற கா.மாணிக்கவாசகர், அரியாலையூர் தந்த நூலகர் சபாரத்தினம் தனபாலசிங்கம், அனலைதீவு திரு.கணேசஐயர் சௌந்தரராஜன் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் பதிவாகியுள்ளன. பின்னிணைப்பாக வேதநாயகம் தபேந்திரன் எழுதிய ‘எழுத்தாளர்களை உருவாக்கிய  நூலகர் பொன்னையா இராசரத்தினம்” என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Capacidad del Tanque

Content Fat santa $ 1 Depósito | Bonos con el pasar del tiempo tanque de cinco euros ¿Los primero es antes resultan las viviendas sobre