16871 குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹீஸைனிய்யுல் ஹாஷிமிய் (ரலி).

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 63/A, புஹாரி மஸ்ஜித் வீதி, கல்பொக்க, வெலிகம, 2வது பதிப்பு, ஜீலை 2018, 1வது பதிப்பு, மே 2002. (திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், சீத்தப்பட்டி பிரிவு, ஜே.ஜே.பொறியியல் கல்லூரி அருகில், மணப்பாறை ரோடு).

129 பக்கம், புகைப்படம், தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ.

குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் முதல் இரு பாகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. முதற்பாகத்தில் தோற்றம், தந்தை, மௌலவி சுஜப் அவர்கள் தாம் எழுதிய ஆங்கில நூலில் ஜமாலிய்யா மௌலானா அவர்களைப் பற்றி எழுதிய பிழையான கருத்துக்கு கண்டனை, ஜமாலிய்யா மௌலானா அவர்களின் பிள்ளைகள், தாய், பகுதாதிலிருந்து முதன்முதல் வெலிகாமம் வெலிப்பிட்டிக்கு வந்த முஹம்மத் மௌலானா அவர்களின் சந்ததிகள், பாலியம், கல்வி, திருமணம், அஸ்ஸய்யித் முஹம்மத் மௌலானா அவர்களின் இன்னொரு பாரம்பரியம், சேவைகள், மறைவு ஆகிய 12 அத்தியாயங்களில் வரலாற்றின் முதற் பகுதி (பக்கங்கள் 1-64) இடம்பெற்றுள்ளது. நூலின் இரண்டாம் பாகத்தில் (பக்கங்கள் 65-129) ஞானம், ஞானக் கேள்வி, ஞானத்தை நாடிச் செல்வோர்- கீமியாயே ஸஆதா, சிறு வயதிலே தாம் பெற்ற பேரின்பம், யவானிஉ, புகழாரங்கள், கண்டனம், அறப்போதனைகளும் எழிற் கருத்துகளும், சில சிறப்பு மிக்க கனவுகள், பிறவற்றில் ஹக்கை அறிதலும் பொதுவான போதனைகளும், தெளி தேன்கள், ஞான அமுதங்கள், ஒரு கனவும் அதன் தாற்பரியமும் ஆகிய 12 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்