கந்தையா சிவயோகஈஸ்வரன். ஐக்கிய இராச்சியம்: டாக்டர் கந்தையா சிவயோகநாதன், நொட்டிங்ஹாம், இங்கிலாந்து, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 107 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ.
இந்நூல் Yogaswamy-The Divine Reincarnation of Our God (APPU) என்ற நூலின் தமிழாக்கமாகும். நூலாசிரியர் ஈஸ்வரன், தான் யோகர் சுவாமிகளோடும், அவரது சீடர்களுள் ஒருவரான சந்த சுவாமிகள் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் (துயஅநள சுயஅளடிழவாயஅ) ஆகியோருடன் கொண்ட தொடர்புகளால் பெற்ற அனுபவங்களைப் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார். அறிமுகம், யோக சுவாமி, செங்கலடி சிவதொண்டனும் சந்தசுவாமியும், அற்புதங்கள், பின்னிணைப்பு (மார்க்கண்டு சுவாமிகள், சுப்ரமுனிய சுவாமிகள், சந்த சுவாமிகள், சந்த சுவாமி கடிதம் – சிவதொண்டன் பண்ணை, சேர். பீட்டர் ராம்ஸ்போத்தம் உடைய அஞ்சலி 23-12-2004, எங்கள் சந்த சுவாமிகளுக்கு அஞ்சலி 23-12-2004), குறிப்புகள், நூற்பட்டியல், முடிவுரை ஆகிய ஏழு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.