16876 யோகர் சுவாமிகள் வாழ்க்கை வரலாறும் நற்சிந்தனையும்.

தி.விசுவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1008-50 Elm Drive East, Mississauga, Ontario, L5A 3X2, 2வது பதிப்பு, ஆவணி 1997, 1வது பதிப்பு, பங்குனி 1996. (கனடா: பாரதி பதிப்பகம்).

24 பக்கம், விலை: கனேடிய டொலர் 2.00, அளவு: 21.5×14 சமீ.

மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவயோக சுவாமிகளின் (1872-1964) ஆத்மீக சிந்தனைகளையும், அருமை பெருமைகளையும் இந்நூல் தொகுத்துத் தருகின்றது. யோகர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக  முதல் மூன்று பக்கங்களிலும் காணப்படுகின்றது. தொடர்ந்து அவரது நற்சிந்தனைகள் சிவ சிவ ஓம் ஓம், எங்கள் குருநாதன், சொல்லு சிவமே, வேண்டில் வேண்டாமை வேண்டிட வேண்டுமே, வீரமாமயில் ஏறும் வேலவ, நமச்சி வாயவென நாம் வாழ்குவமே, சிவனடிக் கன்பு செய் அனைத்துஞ் சிவமே, போற்றி போற்றி சிவசிவ போற்றி, எக்காலம், சிவநாமஞ் சொல்லுவோமே, நல்லூரான் திருவடி, நல்ல மருந்து, ஈசனே நல்லை வாசனே, நமச்சிவாயப் பத்து, முத்தி நல்குமே, ஆசான் அருள், சிவசிவ என்னச் சிவகதியாமே, சிவனடி துணை, திருவடி துணை, சமயங் கடந்த சங்கரா வடைக்கலம், சிவசிவ என்றிடத் தீரும் பாவம், மங்களம் ஜெய மங்களம் ஆகிய பக்தி இலக்கியச் சிந்தனைகள் செய்யுள் வடிவிலும், சிவதொண்டு, ஒழுக்கமுடைமை, நான் யார்?, அஞ்சேல் ஆகிய உரைநடை நற்சிந்தனைகளையும் இச்சிறு நூல் கொண்டுள்ளது. 

ஏனைய பதிவுகள்

Online Slot machines!

Blogs Best Online slots To possess Athlete Of Us United states Slot Game Create I must Play for Real money? Mighty Titan Link And you