16877 யோகர் சுவாமியும் அவரின் சில விசித்திர சீடர்களும்.

கந்தையா மகேந்திரன். யாழ்ப்பாணம்: கந்தையா மகேந்திரன், கோவளம், காரைநகர், 1வது பதிப்பு, 2022. (சென்னை 600 018: மல்ட்டி கிராப்ட்ஸ், 39, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை).

152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

ஆசிரியரின் பெரிய தகப்பனாரும், காரைநகர் அறுகம்புலம், ஆலடியைச் சேர்ந்தவரும், நொச்சியாகம முன்னைநாள் வர்த்தகரும், சமூக-சமய செயற்பாட்டாளருமான முருகேசு பொன்னுத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டுள்ள நூல். இந்நூலில் சிவயோக சுவாமிகளின் சீடர்களான திருமதி இரத்னாமா நவரத்தினம், சுசுநாகா வீரப்பெருமா, சிவாய சுப்ரமுனிய சுவாமி, ஜேர்மன் சுவாமி, நரிக்குட்டி சுவாமி, கந்தசுவாமி, சாம் விக்கிரமசிங்கே, ஜேம்ஸ் ஜோர்ஜ்-கனடா நாட்டுத் தூதுவர், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், மாணிக் சந்திரசாகரா ஆகியோரின் யோகர் சுவாமிகளுடனான உறவு பற்றி தனித்தனிக் கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. இறுதிப் பகுதியில் “குட்டிக் கூட்டம்-வரலாறு”, “இலங்கைப் பிரச்சினையில் யோகரின் தீர்க்கதரிசனம்” ஆகிய இரு கட்டுரைகளும் உசாத்துணை நூற் பட்டியல் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15414 கனியமுது : குழந்தைக் கவிதைகள்.

திமிலை மகாலிங்கம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: தேனமுது இலக்கிய மன்றம், 1/1, டயஸ் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1965. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி). 54 பக்கம், விலை: ரூபா 1.10,