குலமணி (ஆசிரியர்), நா.சிவானந்தசோதி (பதிப்பாசிரியர்). கென்ட், பிரித்தானியா: நா.சிவானந்தசோதி, திருமுருகன் அறிவகம், 41, Haddington Road, Bromley,Kent BR1 5RG, 1வது பதிப்பு, மே 2011. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).
72 பக்கம், புகைப்படங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00, அளவு: 25×18.5 சமீ.
தனது ஒன்பதாவது ஆண்டை நோக்கி நகரும் லண்டன் தமிழர் தகவல் சஞ்சிகையின் மே 2011 இதழ் ஆறு திருமுருகன் அவர்களின் 50ஆவதுஅகவை பொன்விழா சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. ஆறு திருமுருகன் அவர்களின் வாழ்வினைப் பதிவசெய்யும் ஏராளமான வண்ணப் புகைப்படங்களுடனும், பல்வெறு பிரமுகர்களின் வாழ்த்துரைகளுடனும், ஆறு திருமுருகன் பற்றிய பல்வேறு சமூக ஆர்வலர்களின் மலரும் நினைவுகளுடன் இவ்விதழ் வெளிவந்துள்ளது. செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி யாத்திரிகர் மடம், நாவற்குழியில் திருவாசக அரண்மனை, ஆதரவற்ற நாய்களைப் பேணும் காப்பகம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார்.