16879 வைத்தீசுவரர் மலர்.

தி.விசுவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1008-50 Elm Drive East, Mississauga, Ontario, L5A 3X2, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கனடா: பாரதி பதிப்பகம்).

(4), 68 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர்,பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் அகவை 85 நிறைவெய்துவதை முன்னிட்டு அவர்களின் பணிகளை நினைவுகூரும் பாராட்டு மலர். மலரின் தொகுப்பாசிரியர் தி.விசுவலிங்கம் அவர்கள் கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவராகவும், “அன்பு நெறி” சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். இம்மலர் 22.09.2001 அன்று வெளியிட்டுவைக்கப்பட்டது. இம்மலரில் பன்னிரு திருமுறைப் பாடல்கள், சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதர், க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் (செல்வி சாவித்திரி வைத்தீசுவரர்), முன்னுரை (தி.விசுவலிங்கம்) ஆகியவற்றைத் தொடர்ந்து வாழ்த்துரைகளும், ஈழத்துச் சிதம்பரம் (சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள்), பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் (க.முருகேசு), காரைநகர் தந்த சைவச் சான்றோன் (ப.கோபாலகிருஷ்ண ஐயர்), காரைநகர் கண்ட பண்டிதமணி (ப.சிவானந்த சர்மா), சிவத்திரு.க.வைத்தீஸ்வரக் குருக்களுடன் நான் (வி.சா.குருசாமி), நான் அறிந்த குருக்கள் ஐயா (அ.ஆறுமுகம்), கற்கண்டுக் குருக்கள் (ந.கணேசமூர்த்தி), புலவர் மணியும் பொன்மனச் செம்மலும் (பா.சோ.பாரதி), சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் (சோ.குகானந்தசர்மா), காலமென்ற தீயில் கருகாத தங்கம் (நா.தர்மையா, து.நாகேந்திரன்), சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் (அதி.வண.கலாநிதி எஸ்.ஜெபநேசன்), சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் (நயினை க.நாகேஸ்வரன்), எங்கள் வைத்தீசுவரக்குருக்கள் ஐயா (திருமதி செல்லம்மா சிற்றம்பலம்), சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் (மு.ஆறுமுகம்), இல்லற ஞானி (ஆ.அம்பலவி முருகன், திரு.மு.சுந்தரலிங்கம்), அணுக்கத் தொண்டர் (சி.சிவசரவணபவன்), ஈழத்துக் காரை வைத்தீசுவரர் ஐயா அவர்கள் (நாகலிங்கம் குஞ்சிதபாதம்), சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் (திருமதி.ச.சின்னராசா), சைவமும் தமிழும் தழைக்கச் செய்த சான்றோன் (ஸ்ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா), எங்களை வாழ்விக்க வந்த தெய்வம் (கே.கே.சுப்பிரமணியம்), ஈழத்தில் பிறக்க வேண்டும் (இரா.செல்வக்கணபதி), மனிதருள் மாணிக்கம் (திருமதி வசந்தா வைத்தியநாதன்), யாம் இருவேம்…. (வட்டுக்கோட்டையூர் க.மயில்வாகனனார்), ஆண்டிகேணியான் துணை (வே.இராசநாயகம்), மூதறிஞர் சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் வாழ்வும் பணியும் (ஐ.தி.சம்பந்தன்), மானிடம் வென்றதம்மா…. சில நினைவுகள் (யோகலட்சுமி சோமசுந்தரம்), சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி, சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் (தி.விசுவலிங்கம்), சிவஸ்ரீ ச.கணபதீசுவரக் குருக்கள் (F.X.C.நடராசா), காரைநகர் மணிவாசகர் சபை அமைக்கவிருக்கும் கணபதீஸ்வரக் குருக்கள் நூலகம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கிய சான்றிதழ், புலவர்மணி சோ.இளமுருகனார் அவர்கள் சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு எழுதிய திருமுகம், ஈழத்துச் சிதம்பர புராண பதிப்பாசிரியரது ஆர்வம் (நவாலியூர் சோ.நடராசன்), ஈழத்துச் சிதம்பர புராணம், காரைநகர் கார்த்திகேயப் புலவரின் திக்கைத் திரிபந்தாதி: மூலமும் – உரையும் (நா.சுப்பிரமணியன்), திண்ணபுர அந்தாதி – ஒரு கண்ணோட்டம் (சுருக்கம்) (கா.கைலாசநாதக் குருக்கள்), மார்கழி மாதம் பீடையானது என்பது தவறு அது பெரும் பீடு கொண்ட மாதம் திருவாதிரை அபிஷேகம் சிறப்பு அம்சம் (சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

jogo de cassino on-line

Estratégias de cassino on-line Melhor cassino on-line Jogo de cassino on-line A grande maioria dos jogos de casino gratuitos comportam-se exatamente da mesma forma que

14416 தமிழியல் தடங்கள்.

அருட்திரு தமிழ்நேசன் அடிகள் (இயற்பெயர்: அருட்திரு பாவிலு கிறிஸ்து நேசரெட்ணம்). மன்னார்: கலையருவி வெளியீடு, சமூகத் தொடர்பு அருட்பணி மையம், மன்னார் மறை மாவட்டம், புனித சூசையப்பர் வீதி, பெற்றா, 1வது பதிப்பு, டிசம்பர்