நூலாக்கக் குழு. நோர்வே: மகா சிற்றம்பலம், ஒஸ்லோ, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).
146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ.
நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழ்ந்த மூத்த சமூக அரசியல் செயற்பாட்டாளரான அமரர் கணபதிப்பிள்ளை சிவராஜா (06.09.1944-06.12.2020) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் தொகுப்பு. தாயகத்தில் தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர். 1972இல் தனது 27ஆவது வயதில் நோர்வேயில் தொழில் வாய்ப்பினைப் பெற்று “துரொம்சோ” நகருக்குப் புலம்பெயர்ந்தவர். இத்தொகுப்பில் அவரது வாழ்வையும் அவர் இயங்கிய தளங்களினூடாக அவரது சமூக வகிபாகத்தையும் ஆவணப்படுத்தியுள்ளனர். இம்மலரின் நூலாக்கக் குழுவில் ரூபன் சிவராஜா, பாலசிங்கம் யோகராஜா, மகா சிற்றம்பலம், ராஜன் செல்லையா, நிர்மலநாதன் காசிநாதன், சிற்றம்பலம் சுபேந்திரன், உமைபாலன் சின்னத்துரை ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.