16886 வாழ்வியல் அனுபவங்கள்- எனது சரிதை.

கா.வைத்தீஸ்வரன் (மூலம்), க.இறைவன் (பதிப்பாசிரியர்).  கொழும்பு: சுகவாழ்க்கைப் பேரவை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2023. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).

104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×16 சமீ.

பொதுச் சுகாதாரப் பரிசோதகராக (PHI), சுகநலக் கல்வியாளராக, உளவள ஆலோசகராக  எம்மிடையே வாழ்ந்து மறைந்த கலாபூஷணம் இணுவை கா.வைத்தீஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. எனது சரிதை, என் ஆரம்ப வாழ்க்கை தொடர்பான பின்னணி, பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கம், எனது முதல் நியமனம் (பிட்டிகல, எல்பிட்டிய), இரண்டாவதாக கடமையாற்றிய பகுதி திருக்கோவில் (மட்டக்களப்பு மாவட்டம்), பொத்துவில் பிரதேசம் -பொதுச் சுகாதாரப் பரிசோதகர் 1964-1965, கோப்பாய்ப் பகுதி – பொதுச் சுகாதாரப் பரிசோதகர் 1967-1968, சுகாதாரக் கல்வியாளன் பயிற்சி நெறி – யாழ் மாவட்ட நியமனம், வன்னி நிலப்பரப்பில் சுகாதாரக் கல்வியாளனாகச் சேவை 1971-1974, உலக சுகாதார ஸ்தாபனத்தின் புலமைப்பரிசில்- 1974, யாழ். பிராந்திய சுகாதாரக் கல்வியாளனாகச் செயற்பாடுகள், சமூகத்துடனான என் வாழ்வியல் அனுபவம், தென்கிழக்காசிய பிராந்தியத்தில் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான உலக சுகாதார ஸ்தாபன புலமைப் பரிசில் 1983-1984, உளவள ஆலோசகரின் வாழ்வியல் அனுபவங்கள், எனது இல்வாழ்க்கை தொடர்பான அனுபவங்கள், கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடனான சேவை, எனது நூலாக்கப் பணிகள், சுகவாழ்க்கைப் பேரவை, ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம்-என் வாழ்வியல் அனுபவம் ஆகிய 19 இயல்களில் இச்சுயசரிதை எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Jogue Slots Online Grátis

Content Bienvenido Alträ Mundo Do Las Tragamonedas Fria Con Más Do 16 000 Juegos Circus Casino Beste Online Gokkasten Gratis Spelen Odjur Online Casinos Based