16888 ஏழைப் பாலகர்களின் தோழன்.

தெனகம சிரிவர்த்தன (சிங்கள மூலம்), மடுளுகிரியே விஜேரத்ன (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(x), 11-160 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-30-4778-6.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இளமைக்கால சுயசரிதை சிறுபராயக் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. தெனகம சிரிவர்த்தன இதனை முன்னர் ”துப்பத் தருவன்கே மிதுறா” என்ற பெயரில் சிங்கள மொழியில் எழுதியிருந்தார். பிறந்தகத்தின் போராளி/ ஏழைப் பாலகர்களின் தோழன்/ அது தான் சரியான செயல்/ வெள்ளையர்கள் இருந்திருந்தால் நானும் அவர்களுடன் சண்டை பிடிப்பேன்/ ஒரு சுதந்திரத்தைப் பார்/ ஒரு விவசாயி பாராளுமன்ற உறுப்பினரானது எப்படி?/ பாராளுமன்றத்தில் மாடு இருப்பதா?/ அவ்வாறான வேலைகளை இனி செய்யமாட்டேன் அம்மா/ பயங்கரமான விளையாட்டு/ தந்தை காட்டிய முன்மாதிரி/ நாமும் அவர்களைப்போல ஆகுவோம்/ நாம் மகாராணியைப் பார்க்க ஏன் வந்தோம்?/ பிரித்/ மாங்காய் அடி/ மீனவர்கள் ஏன் ஏழை?/ கிராமத்து நோயாளிகளைத் தேடி/ ஆசிரியரின் மனதைப் புண்படுத்தாமல்/ பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு நல்லதொரு பாடம்/ ஏழை மாணவனைப் பாதுகாத்தல்/ குறும்புவேலைகள் செய்தால் பரவாயில்லை ஆனால் கீழ்த்தரமான வேலைகள் செய்யவேண்டாம்/ மகனே ஆண் கதாபாத்திரத்தில் நடித்தாலும் பெண் பாத்திரத்தில் நடிக்கப் போக வேண்டாம்/ அந்தச் சட்டத்தால் பயனில்லை/ அப்பாவுக்கும் டிக்கற் விற்பனை/ தமிழ் மாணவர்களின் பாதுகாவலன்/ இந்தப் பேருந்து மக்களுக்குச் சொந்தம்/ கிராமத்தில் நானும் விவசாயி/ பொம்மை/ தந்தைமார் உருவாக்கிய கட்சியை விட்டுப் போக வேண்டாம்/ எஜமானுக்கும் ஒரு படிப்பினை/ தொழிலும் போராட்டமும்/ தந்தையிடமிருந்து ஒரு கடிதம்/ 18 வயது ஊழியர் சங்கத் தலைவர்/ பணம் நிறைந்த அலுமாரி ஒன்றை வேண்டாம் என மறுத்த தந்தை/ மரணத்துக்குப் பயப்படாத மனிதன்/ கடனிலிருந்து மீள்வதில் உள்ள மகிழ்ச்சி/ உத்தம தந்தையொருவர் உலகத்திலிருந்து விடைபெறுகிறார்/ பெலியத்தைக்கு கட்சி அமைப்பாளராக நியமனம்/ தம்பராவே தேரரின் கொலைக்குக் கண்டனம்/ எந்தக் கேள்விக்கும் பதில் உண்டு/ ஜனநாயகம் இதுவா?/ மஹிந்த பாராளுமன்றம் செல்கின்றார் ஆகிய 41 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9 Reel Ports

Blogs Orient express play slot – Some Best Ports We believe You should try How exactly we Speed and you will Opinion Online slots games

Videoslots Gambling enterprise Opinion

Blogs This is Rigged Local casino For example The phone Gambling enterprise Affiliate Feedback And Recommendations Position World Gambling establishment Withdrawals And you will Places