16891 ஸ்ரீமாவோ: உலகின் முதலாவது பெண் பிரதமரைக் கௌரவித்தல்.

திஸ்ஸ ஜயதிலக்க (ஆங்கில மூலம்), எஸ்.துரைராஜா, எஸ்.சிவகுருநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: பண்டாரநாயக்க அரும்பொருட் காட்சியகக் குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்த, 1வது பதிப்பு, 2016. (ஒறுகொடவத்தை: குணரத்ன ஓப்செட் லிமிட்டெட், 235/10, அவிசாவளை வீதி).

352 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-955-0537-00-6.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வெளிநாட்டுக் கொள்கை (ஜயந்த தனபால), 1970ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி ஆட்சிக் குழுவும் இலங்கையில் குடியேற்றவாத ஆட்சிக்குப் பிந்திய இலங்கை அரசும் (ஜயதேவ உயங்கொட), இலங்கையில் 1960களிலும் 1970களிலுமான கல்வியின் கருத்துக் கூறுகள் (சுவர்ணா ஜயவீர), 1972-பின்னோக்கிய பார்வை (ஜயம்பதி விக்ரமரத்ன), ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் லங்கா மஹிலா சமித்தியும் (ரம்யா சாமலி ஜிரசிங்க), திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை நினைவு கூருதல் (லக்ஷ்மன் கதிர்காமர்), பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க: ஒரு தனிப்பட்ட நினைவுக் குறிப்பு (எம்.டீ.டீ.பீரிஸ்), ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க: பொருளாதார விவகாரங்களில் அவர் வகித்த பாத்திரம் (லீலானந்த டி சில்வா), பாராளுமன்றத்தில் திருமதி பண்டாரநாயக்க (சாம் விஜேசிங்க), உலகின் முதலாவது பெண் பிரதமர்-ஒரு புகழாரம் (பிராட்மன் வீரக்கோன்), இந்தியாவிலிருந்து ஒரு புகழாரம் (கோபாலகிருஷ்ண காந்தி), ஒரு சிவில் ஊழியரின் கருத்துரை (திலக் ஈ.குணரத்ன), ஸ்ரீமாவோ ஆர்.டீ. பண்டாரநாயக்க அம்மையார் (மானெல் அபேசேகர), திருமதி பண்டாரநாயக்கவும் சிறுபான்மை இனங்களும் (ஏ.ஜாவிட் யூசுப்) ஆகிய படைப்பாக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12949 – கலாசூரி, இலக்கியச் செம்மல், மகாவித்துவான் F.X.C.நடராசா: வாழ்க்கை வரலாறு.

த.செல்வநாயகம். மட்டக்களப்பு: த.செல்வநாயகம், 37, திசவீரசிங்கம் சதுக்கம், எல்லை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). xii, (4), 92 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, தகடுகள்,