16892 கௌரி நீதிக்கான குரல்.

கே.வி.தவராசா (தொகுப்பாசிரியர்). வாகனேரி: செய்ஹ் இஸ்மாயில் ஞாபகார்த்த பதிப்பகம்,  SIM Publications, River Bank Road, காவத்தமுனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

liii, 394 பக்கம், 20 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19 சமீ., ISBN: 978-955-1447-25-0.

அமரர் திருமதி கௌரிசங்கரி தவராசா (1955-2021) அவர்களின் மறைவின் முதலாமாண்டு நிறைவின்போது வெளியிடப்பட்ட நினைவுமலர். இம்மலர் மூன்று முக்கிய பிரிவுகளில் ஏராளமான ஆக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவது பிரிவு, மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி தவராசாவின் நினைவுகளைச் சுமந்திருக்கும் 72 அனுதாபச் செய்திகளைக் கொண்டுள்ளது. இரண்டாவது பிரிவு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பற்றிய தெளிவைப் பதிவுசெய்யும் வகையில் எழுதப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் 1979-2022, ஆயுதப் போராட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் சிங்கள தலைமைத்துவங்களும், அவசரகாலச் சட்டத்தின் தோற்றம், கைதுகளும் வழக்குகளும் 1981-2022, 1981ஆம் ஆண்டு இனக்கலவரம் (Central Camp), 1983ஆம் ஆண்டின் இனவழிப்பு, அரசியல் கைதிகளின் வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகள் துரோகிகள் ஆகிய 8 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மூன்றாவது பிரிவு  1981ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான முக்கிய 40 வழக்குகள் பற்றிய விரிவான தகவல்களை ஒளிப்படங்களுடன் தனித்தனி கட்டுரைகளாகத் தருகின்றன. இம்மூன்று பிரிவுகளும் மிகவும் பெறுமதியான உசாத்துணை ஆவணங்களாக அமைகின்றன.

ஏனைய பதிவுகள்

Winspark Local casino France Avis

Articles Winspark Cellular App Athlete Has experienced Down Withdrawal Which was Asked To begin with Problems On the Playoro Gambling enterprise And you will Related