16895 நினைவழியா நாட்கள்.

செ.இளமாறன் (புனைபெயர்: குலம்). சுவிட்சர்லாந்து: செ.இளமாறன், 1வது பதிப்பு,ஓகஸ்ட் 2022. (சுவிட்சர்லாந்து: தமிழ் அச்சகம், Rosengarten str 10, 8037 Zurich).

(5), 179 பக்கம், ஒளிப்படங்கள், தகடுகள், விலை: இயூரோ 20.00, அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-3-906963-01-3.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளராக இருந்த திரு.குலம் அவர்கள் எழுதிய விடுதலைப் புலிகளின் ஆரம்பகால வரலாறு கூறும் நூல். எழுபதுகளின் ஆரம்பகாலம், அரசியல் இயக்கங்களின் தோற்றமும் தம்பியின் (பிரபாகரன்) போராட்டப் பயணமும், தம்பியின் முதல் தமிழ்நாட்டுப் பயணம், தமிழீழம் திரும்பிய தம்பி, துரையப்பா மீதான நடவடிக்கை, தம்பியுடனான எனது நேரடி அறிமுகம், இயக்கத்தின் விவசாயப் பண்ணைகள், புலிகளின் உள்ளமைப்பு விதிகளும் ஆட்சேகரிப்பும், தம்பியுடனான மிதிவண்டிப் பயணங்கள், தம்பியின் கொழும்புச் சந்திப்புகள்-இயக்க விரிவாக்கம்-பாலஸ்தீனப் பயிற்சி, புலிகள் அமைப்பின் உரிமைகோரலும் தமிழரசுக் கட்சியுடனான தொடர்புகளும், அவ்ரோ விமானத் தகர்ப்பும் பஸ்தியாம்பிள்ளை குழு மீதான தாக்குதலும், இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு, நாராந்தனை சமாதான முயற்சி, இயக்கப் பிளவுக்குப் பிந்திய காலம், எனது மூத்த சகோதரியின் செய்தி, பின்னுரை ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் ஒரு சுயவரலாற்றுப் பாணியில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்