சிவகாமி, யாழினி. யாழ்ப்பாணம்: மறுயுகம் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி).
(9), 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7286-04-4.
சிவகாமியும் யாழினியும் தம் மக்களின் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட இரு பெண்கள். சக போராளிகளையே எதிரியாகக் கண்டு திகைத்துப் போனார்கள். அநீதிக்கு எதிராகத் துணிந்து நின்று போராடும் குணத்தினாலும், புத்திசாலித்தனத்தினாலும், அங்கிருந்தும் போராடி விடுதலை பெற்றார்கள். அவர்கள் தமது அனுபவங்களை எவ்வித மிகைப்படுத்தலுமின்றி உள்ளது உள்ளபடி இந்நூலில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண் போராளிகளுக்கு ஏற்பட்ட துன்பங்கள் பேரினவாத ஒடுக்குமுறையால் மட்டுமல்ல சொந்த போராட்ட இயக்கங்களினாலும் சொந்த சமூகத்தாலும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதை இந்நூல் புரியவைக்கின்றது.