16897 வின்னி மண்டேலாவின் வாக்குமூலம்.

மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்;). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×13 சமீ., ISBN: 978-624-5849-12-3.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது வெறும் வார்த்தையல்ல. அது வரலாறு. தென்னாபிரிக்காவில் 27 வருடகாலம் போத்தா நிறவெறி அரசின் அடக்குமுறையால் சிறைவாசம் அனுபவித்த தென்னாபிரிக்க மண்ணின் விடுதலைவீரன் நெல்சன் மண்டேலாவின் வெற்றிக்கும், விடுதலைக்கும் பின்னால் அவரது துணைவி வின்னி மண்டேலாவின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் மிகக் காத்திரமான பங்களிப்பை நல்கியிருக்கின்றன. முதலாளித்துவ அரசுகளும் அவர்களது ஊடகங்களும் எவ்வாறு தமக்கு எதிரானவர்களை அப்புறப்படுத்தி முக்கியம் இழக்கச் செய்கின்றன என்பதற்கு வின்னி மண்டேலாவின் கதை நமக்கொரு பாடமாகும். இந்தப் போராட்டத்தில் வின்னி மண்டேலாவின் வகிபாகத்தை வெளிக்கொண்டு வருவதே இந்நூலின் நோக்கமாகும். அதனை ஒரு சுயசரிதைப் பாங்கில் ஆசிரியர் வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Mozzartbet Bonus Însă Vărsare

Content A căsca Partidă Recent La Don Casino Rotiri Gratuite Mr Bit 2024 Vră-jitoresc Jackpot 50 Rotiri Gratuite Dar Depunere Obține bonusul dar achitare Netbetdisponibil