16900 காலத்தை வென்ற கமலம் : கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா மலர் 2007.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா அமைப்பு, தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, ஜனவரி 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

ix, 264 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ.

எஸ்.கே.யோகநாதன், அ.சண்முகதாஸ், ஆறு திருமுருகன், பா.தனபாலன், திருமதி ஞா.கணேசநாதன் ஆகியோரை உள்ளடக்கிய மலர்க்குழுவினரால் தொகுக்கப்பட்ட இம்மலர் நான்கு இயல்களைக் கொண்டுள்ளது. முதலாவது இயலில் வாழ்த்துச் செய்திகளும் இரண்டாவது  இயலில் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் வாழ்வும் பணியும் தொடர்பான ஆய்வுப் பிரதிபலிப்புக் கட்டுரைகளும், மூன்றாவது இயலில் யாழ்ப்பாணத் தேசிய கல்வியியற் கல்லூரிக் கல்வியியலாளர்களின் ஆசிரியத்துவம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் நான்காவது இயலில் கலாநிதி தி.கமலநாதன் அவர்களைப் பற்றிப் பல்வேறு தரப்பினரின் இயல்பும் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது இயலில் காணப்படும் கட்டுரைகள் பின்வருமாறு: வகுப்பறைக் கற்றல், கற்பித்தலை வினைத்திறனாக்கும் ஆசிரிய முகாமைத்துவ நுட்பங்கள் (S. K. யோகநாதன்), பாடசாலைகளிற் கல்வி ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தலும் பிரயோகங்களும் (பாலசுப்பிரமணியம் தனபாலன்), கல்வித் தொழிநுட்பமும் ஆசிரியரும் (க. கமலாநதன்), மனிதத்துவத்தை விருத்தியாக்கும் அழகியல் கல்வியின் கோட்பாடுகளும் செயலாற்றுகைகளும் தொடர்பான ஆய்வியல் நோக்கு (திருமதி ஞானசக்தி கணேசநாதன்), வினைத்திறனான கற்றல், கற்பித்தல் செயலொழுங்கில் ஆசிரியர் மாணவர் இடைவினை உறவின் பங்களிப்பு (திருமதி ஜெயமலர் தியாகலிங்கம்), ஆசிரிய வாண்மையில் கல்வி வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் பயன்பாடுகளும் பிரயோகங்களும் (திருமதி கௌரி சுரேசன்), மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் இணை பாடவிதான கலைத்திட்ட நடைமுகள் (செல்வி கிரிஜா கந்தசாமி), கல்வி உளவியலில் கற்றல் கொள்கைப் பிரயோகங்கள் (திருமதி சுகந்தினி அன்ரனி தவச்செல்வம்), தூண்டல் துலங்கற் கற்றற் கொள்கைகள்-நடத்தைவாதக் கற்றற் கொள்கைகள், அறிவுசார் கற்றற் கொள்கைகள் (கள அறிகைக் கற்றற் கொள்கைகள்), இருபதாம் நூற்றாண்டில் ஈழத்தின் கர்நாடக இசைத்துறை வளர்ச்சியில் யாழ்ப்பாண மாவட்டத்து இசை நிறுவனங்களின் பங்களிப்பு (திருமதி விக்னேஸ்வரி நரேந்திரா), செவிச் செல்வமும் அதனைப் பேணிக்கொள்வதற்கான சிறப்பார்ந்த வழிமுறைகளும் (செல்வி. இந்திரா செல்வநாயகம்), விசேட தேவையுடையோர் எதிர்கொள்ளும் நெருக்கீடுகள் (திரு. த. சிவகுமார்), பிள்ளை நேயப் பாடசாலை அர்த்தப்படுத்தலில் ஆசிரியர் பங்கு (செல்வி N. நல்லையா), எண்ணக்கரு மாதிரியுரு அண்மை விருத்திக்கான வலயம் அற்ற நிலை, ஈழத் தமிழர் ஓவியக் கலையின் பின்னடைவிற்கான ஏதுக்களும் சாதகமான மாற்றுக்களும் (திருமதி பப்சி. மரியதாசன்), பரதநாட்டியக் கலையின் பண்பாட்டுப் பல்பரிமாணங்கள் ஒரு நோக்கு (திருமதி புவனா வேல்நிதி), கணிப்பீடும் மதிப்பீடும் அண்மைக்காலப் போக்குகள் (கி. கிருஸ்ணயோகன்), G.C.E (O/L) Examination 1999-2003 ஆற்றுகைக் கணிப்பீட்டின் வினைத்திறன் மிக்க கணிப்பீட்டுக் கருவியாக மாணவர் செயலடைவுக் கோவை (திருமதி ஜெ. உதயகுமார்), அழகியலின் அனுகூலங்களும் அவற்றின் கற்றல் தளங்களும் (க. ரட்ணேஸ்வரன்), ஆரம்பக் கல்வி கற்பித்தற் செயற்பாட்டில் நாடகம் (க. இ. கமலநாதன்), இசைத்துறையில் ஆர்வத்தினை ஏற்படுத்துவதில் கற்பித்தல் நுட்ப முறைகளின் பங்கு (திருமதி சி.வை. குகநேசன்), நாடகப் படைப்பாக்க செல் நெறிகள் (க. திலகநாதன்), Teaching Learning Mathematical Problem Solving (K. Baskaran), Budgetary Techniques in Library Management (Mrs. R. Pararajasingam), The Emotional, Behavioral Problems and Their impact on Children (T. Mohan), Teaching English through Audio Visual Aids (S. Mugunthan). அடைப்புக்குறிக்குள் ஆய்வாளர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

online casino with real money

オンラインカジノのレビュー Casino slots online Online casino with real money VegasSlotsOnline.com is the web’s definitive slots destination, connecting you and like-minded players to the games you