கலாநிதி ஹ.சி.தாவீது அடிகளின் நினைவுக்குழு. பருத்தித்துறை: கலாநிதி ஹ.சி.தாவீது அடிகளின் நினைவுக்குழு, தும்பளை, 1வது பதிப்பு, ஜீன் 2007. (பருத்தித்துறை: புதிய எஸ்.பி.எம். (S.P.M ஓப்செட் அச்சகம், வீ.எம்.வீதி).
vii, 63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
தும்பளையில் 28.06.1907 இல் பிறந்தவர் கலாநிதி தாவீது அடிகளார். இவர் கல்வியில் சிறந்து விளங்கி, பிற்காலத்தில் பன்மொழி வல்லுநரும் சொற்பிறப்பியல் ஆய்வாளனும் பல்துறை அறிஞனும் ஆகினர். 1981இல் மறைந்த கலாநிதி தாவீது அடிகள் பிறந்த நூறு ஆண்டுகள் நிறைவை 2007இல் நினைவுகூர்ந்த வேளை அவரது இல்லத்தில் அவரது திருவுருவப் படம் திரைநீக்கம் செய்து வைக்கப்படுகின்ற நிகழ்வில் இம்மலர் கலாநிதி தாவீது அடிகள் நினைவுக் குழுவால் 28.06.2007 அன்று வெளியிடப்பட்டது. தாவீது அடிகள் பற்றிய பல்வேறு செய்திகளும், அஞ்சலிக் கடிதங்களும் இடம்பெற்றுள்ளன.