16910 மொழியியற் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் ஆய்வுகளும் புலமைத் திறன்களும்.

இளையதம்பி பாலசுந்தரம். கனடா: சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, 2022. (ரொறன்ரோ: A Fast Print).

xvi, 136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-0-9731932-5-1.

இந்நூலின் முதலாவது இயலில் பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களின் கல்விப் புலமை பற்றிப் பேசப்படுகின்றது. இரண்டாவது இயலில் பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களின் மொழியியல் ஆய்வுகளும் ஆய்வு நூல்களும் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இந்த இயலில் 1. Sumerian-A dravidian Language -1965, 2. Porto-Sumerio-Dravidian: The Common Origin of Sumerian and Dravidian – 2017, 3. தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி – 2006, 4. மொழியியலும் தமிழ்மொழி வரலாறும் -2021, 5. சங்க நூல்களில் ஒலிக்குறிப்பு, 6. அசை மொழிக் காலத் தமிழ்நாடு ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாவது இயலில் பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களின் இலக்கிய ஆய்வும் ஆய்வு நூல்களும் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இதில் 1. ஞானப்பள்ளு (திருத்திய பதிப்பு 1968) இரண்டாம் பதிப்பு: 2018, 2. ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்-1966, 3. ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை, 1963, 2020. 4. கருத்துரைக் கோவை-1959 ஆகிய படைப்புகள் பற்றிய திறனாய்வுகள் இடம்பெற்றுள்ளன. நான்காவது இயலில் சைவ நெறிமுறைகளை மக்களுக்கு உணர்த்திய சைவப் பெரியார் என்ற தலைப்பில் 1. சமயங்களும் உலக சமாதானமும் என்ற கட்டுரை பற்றி விளக்கப்பட்டுள்ளது. இயல் ஐந்தில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரின் வினைத்திறன்கள் என்ற கட்டுரையும், இயல் ஆறில் இலக்கிய மரபுசார் இயக்கமும் பேராசிரியரின் செயல்திறன்களும், இலக்கிய மரபு பேணலிற் பேராசிரியரின் பங்களிப்பு ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

The 6 Chinese Dating Web Sites

Content Rocky Relationships Nice Matching Services The most effective way https://japanese-women.net/meet-asian-women/ is to combine leisure with learning through platforms like Lingopie that supply Japanese dramas