16915 மரியசேவியம்: கலைத்தூது அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் முதலாம் ஆண்டு நினைவு மலர்.

கி.செல்மர் எமில் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராப்பிக்ஸ், 54, இராஜேந்திரா வீதி).

vii, 186 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

கலைத்தூது அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் (03.12.1939- 01.04.2021) முதலாம் ஆண்டு நினைவு தினம் 01.04.2022 அன்று அனுஷ்டிக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட நினைவுமலர் இதுவாகும். அடிகளார் பற்றிய பல்வேறு சமூக, கலை இலக்கியத்துறை பிரமுகர்களின் நினைவுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் உள்ள விடயங்கள் கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகள்,  கவிதைகள், அரங்க நிறுவனங்களின் அஞ்சலிகள், பொது நிறுவனங்களின் அஞ்சலிகள், அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிகள், பிரசுரங்கள் என்ற ஒழுங்கில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

10258 கட்டுருவாக்கவாதம்: கற்றல் கற்பித்தலுக்கான அணுகுமுறை.

சுப்பிரமணியம் பரமானந்தம். வவுனியா: சுபம் வெளியீடு, கோவில் வீதி, குருமண்காடு, 1வது பதிப்பு, 2007. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு). viii, 108 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள்,

15797 தரணி.

கத்யானா அமரசிங்ஹ (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202,