16919 நமது முதுநிலை ஆடலாசான், ஆற்றுகையாளர், கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களது கலைப் பயணப் பதிவுகள்.

மொன்ட்ரியல் திருமுருகன் ஆலயம்.  யாழ்ப்பாணம்: முனைவர் அருட்பணி அமிர்த ஜெயசேகரம், பணிப்பாளர், தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மன்றம், 17/3, கச்சேரி-நல்லூர் வீதி,  சுண்டிக்குளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராப்பிக்ஸ், 54, இராஜேந்திரா வீதி).

8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ.

12.02.1941 அன்று நெடுந்தீவில் பிறந்த ஆடற்கலைஞர் வேல் ஆனந்தனின் இயற்பெயர் வேலாயுதபிள்ளை அருளானந்தம் என்பதாகும். ஆரம்பக்கல்வியை நெடுந்தீவு புனித சவேரியார் பாடசாலையிலும் யாழ்.புனித சம்பத்திரிசியார் கல்லூரியிலும் கற்றார்.

1953 முதல் 1957 வரை நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று எஸ்.எஸ். சி. சித்தியடைந்த போதுதான் ஆசிரியர் ஏரம்பு சுப்பையாவின் வழிகாட்டலுடன் சக மாணவ, மாணவிகளுடன் நடனக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு புதுடில்லி, கேரள கலாகேந்திராவில் இணைந்துகொண்டார். அங்கு கதகளி, பரதநாட்டியம் ஆகிய பயிற்சிகளை ஆசிரியப் பெருந்தகைகள் கலாநிதி கோபிநாத், பந்தணை நல்லூரி சுப்பராயபிள்ளை ஆகியோரிடமும் கற்றுத்தேர்ந்தார். தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள புகழ்பெற்ற விஸ்வகலாகேந்திராவிலும கேரளாவிலுள்ள சுவாதித்திருநாள் அரச நுண்கலைக்கல்லூரியின் இணைநிறுவகத்திலும் சேர்ந்து கதகளி, கீழைத்தேய ஆடற்கதை ஆகியவற்றை முறைப்படி கற்று விற்பன்னரானார். இலங்கை திரும்பிய “கலைச்செம்மல்” வேல் ஆனந்தன் 1967 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் “கலைக்கோவில்”  நடனக் கல்லூரியை ஆரம்பித்தார். ஆடற்கலை நாயகனாகவும் ஆசிரியனாகவும் இருந்து பல்வேறு கலை நிகழ்வுகளைத் தாமும் மாணவச்செல்வங்களும் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தினார். கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையின் ஆடல்கல்வி விரிவுரையாளராக 1970 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இப்பணி 1979 மார்கழி மாதம் வரை நீடித்தது. 1970ஆம் ஆண்டு குரும்பசிட்டி சன்மார்க்க சபையினரால் இரசிகமணி கனக. செந்தில்நாதன் முன்னிலையில் “தாண்டவச்செல்வன்” விருது வேல் ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Ming Imperial Guards Slot 2024

Content Products Ist dies nicht ausgeschlossen, Spielautomaten gebührenfrei verbunden hinter spielen? The Ming Dynasty 10 Euro Casino Bonus Exklusive Einzahlung Spielautomat Für nüsse Zum besten