சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ். யாழ்ப்பாணம்: திருமதி விஜயராணி உருத்திரேஸ்வரன், அரியாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 230 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
அரியாலையூர் உருத்திரேஸ்வரன் (28.05.1947-23.12.2020) அவர்களின் மறைவின் ஓராண்டு நினைவு நாளின் போது 23.12.2021 அன்று வெளியிடப்பட்ட நினைவு மலர் இது. இத் தொகுப்பில் குருமார்களின் அஞ்சலி உரைகள், அமரர் உருத்திரேஸ்வரன் பற்றி ஏனைய ஆளுமைகளின் கருத்துக்கள், அவரைப் பற்றிய கட்டுரைகள், அவருடைய நேர்காணல்கள் அவர் எழுதிய கட்டுரைகள், அத்துடன் அவர் இதுவரை காலமும் சேமித்து வைத்திருந்த நாடகம்சார் ஆவணங்களும் அவருக்குக் கிடைத்த கௌரவங்களும் என்று அவரைப் பற்றிய முழுமையான தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.