கி.செ.துரை (இயற்பெயர்: கி.செல்லத்துரை). யாழ்ப்பாணம்: டியூப் தமிழ், இல. 712, நாவலர் வீதி, 2வது பதிப்பு, நவம்பர் 2018, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரிண்டேர்ஸ், இல. 555, நாவலர் வீதி).
160 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-87-970470-1-9.
இந்நூலில் உலகப் பகழ்பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்களின் வாழ்வும் பணிகளும் விரிவாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டுள்ளன. தங்கப்பந்தை வென்ற பத்து உதைபந்தாட்ட மேதைகளான கிறிஸ்டியானோ றொனால்டோ (Cristiano Ronaldo) , லியோனஸ் மெஸ்ஸி (Lionel Messi), டியகோ மரடோனா (Diego Maradona) , ஸிடன் (Zidane) , பெரிய றொனால்டோ-பிரேசில் (Ronaldo) , பயாலோ மெல்டினி (Paola Maldini), பீலே (Pele), லெவி யாஸ்கின் (Lev Yashin) , றொனால்டின்கோ (Ronaldinho) , அலன் சிமொன்சன் (Allan Simonsen) ஆகியோரின் வரலாறு இது. சிறந்த ஊடகவியலாளருக்கான ஐ.பீ.சீ.யின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சர்வதேச செய்தியாளரும் டென்மார்க் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்பவருமான கி.செ.துரையின் 35ஆவது நூல் இது.