16924 அருளானந்தம் கேணிப்பித்தன் : வாழும்போதே வாழ்த்துவோம்.

பால.சுகுமார். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, இணை வெளியீடு, மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

vii, 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ.

திருக்கோணமலை மண்ணின் அடையாளங்களில் ஒருவரான கவிஞர் கேணிப்பித்தன் (ச.அருளானந்தம்) அவர்களை வாழும்போதே வாழ்த்தும் முயற்சியாக இந்நூல் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. சண்முகம் அருளானந்தம் (கேணிப்பித்தன்) அவர்களின் சொந்த இடம் திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள ஆலங்கேணி என்பதாகும். இவரது முதற் படைப்பு “இராவணன் கண்ணீர்” என்ற தலைப்பில் சுதந்திரன் பத்திரிகையில் 1964இல் வெளிவந்திருந்தது. முதலாவது கவிதையும் “ஏனோ இப்பிறவி“ என்ற பெயரில் சிந்தாமணி (1964) யில் இடம்பெற்றுள்ளது. சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பத்தியெழுத்து என்பன இவர் ஈடுபாடு கொண்டுள்ள இலக்கியத் துறைகளாகும். இதுவரை 30இற்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

21red Casino

Content Jetzt ansehen: Schritt 1: Registrierung Im Casino Mit 5 Euro Mindesteinzahlung Gratis Casino Im Juni 2024 Wie Lange Sind Meine 20 Euro Ohne Einzahlung