16927 அற்றைத் திங்கள் : தி.ஞானசேகரனின் வாழ்க்கை அனுபவங்கள்.

 தி.ஞானசேகரன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

90 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்துவரும் இலக்கியப் பணிகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருப்பது ”அற்றைத் திங்கள்” என்னும் கருத்தாடல் நிகழ்ச்சியாகும். தமிழின் மூத்த படைப்பாளிகளும் தகைசான்ற ஆளுமைகளும் தமது வாழ்வியல் அனுபவங்கள், கலை இலக்கிய நட்பு எழுகைகள், பண்பாட்டுத் தாக்கங்கள், படைப்பு முயற்சிகள் முதலியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் தனித்துவமான இலக்கிய நிகழ்ச்சியாகும். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 10.09.2022 அன்று இடம்பெற்ற அற்றைத் திங்கள் நிகழ்வில் ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேகரன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் இது. குடும்பப் பாரம்பரியம், எனது பெற்றோர், பாடசாலை நாட்கள், மருத்துவக் கல்லூரி வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, நான் எழுதிய சிறுகதைகள், நான் எழுதிய நாவல்கள், எனது பயண இலக்கியங்கள், ஞானம் சஞ்சிகை, நான் பங்குபற்றிய இலக்கிய மாநாடுகள், பல்கலைக் கழகங்களில் நான் ஆற்றிய உரைகள், நான் தரிசித்த சித்தர்கள், நிறைவாக ஆகிய 14 இயல்களில் இச்சுயசரிதை அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Cellular Online casino games

Posts How to Claim Your Greeting Added bonus And this Casinos on the internet Take on Shell out Because of the Cellular phone? Nj-new jersey