16932 கல்கி பிறந்தார்.

இராஜ அரியரெத்தினம். சென்னை 17: பாரதி பதிப்பகம், தியாகராய நகரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1955. (சென்னை 17: எவரெடி அச்சகம், 85-B, பாண்டி பஜார், தியாகராய நகர்).

60 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.

1945இல் “வயலுக்குப் போட்டார்” என்ற சிறுகதையுடன் ஈழகேசரி வாயிலாக ஈழத்து படைப்பிலக்கியத்துறைக்குள் நுழைந்தவர் ஈழகேசரி ஆசிரியர் பீடத்தை அலங்கரித்த இராஜ அரியரெத்தினம் அவர்கள். தமிழகத்தின் படைப்பாளியான கல்கியின் (கிருஷ்ணமூர்த்தி) படைப்புக்களின் பேரில் அதீத ஈடுபாடு கொண்டவர். பின்னாளில் பத்திரிகையாளராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் கல்கி பற்றி, அவரது எழுத்தாற்றல் பற்றி, இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 268105).

ஏனைய பதிவுகள்

15181 ஈழத்தமிழர் அரசியல் வரலாறு: 1883 தெடக்கம் 1968 வரை: சுருக்கக் குறிப்புகள் (பாகம் 1).

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 75 பக்கம், விலை: ரூபா 100.00,