16933 கலாபூஷணம் ஆ.மு.சி. வேலழகன்: ஓர் அறிமுகம்.

ப.குணசேகரன். களுதாவளை: ப.குணசேகரன், செயற்குழு உறுப்பினர், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்ச் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ.

ஆ.மு.சி. வேலழகன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிவரும் ஒரு எழுத்தாளர். கவிஞராக, நாவலாசிரியராக, பண்பட்ட இலக்கியவாதியாக எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானவர் இவர். ஆதிநாராயணன், முத்து, சின்னத்தம்பி, ஆ.மு.சி.வேலழகன் ஆகிய பல்வேறு புனை பெயர்களிலும் எழுதிவருகின்றார். இருப்பினும் “ஆ.மு.சி.வேலழகன்” என்ற பெயரே இலக்கிய உலகில் இவரைக் குறிக்கும்படியாக நிலைபெற்றுவிட்டது. 1939ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி திருப்பழுகாமத்தில் ஆதிமுத்து சின்னத்தம்பி, வேலாயுதர் வள்ளியம்மை தம்பதியினரின்  5ஆவது பிள்ளையாகப் பிறந்தவர் தான் வேல்முருகு. 1952 காலப்பகுதிகளில் தந்தை ஈ.வெ.ரா., ப.ஜீவானந்தம், சிங்காரவேலர், பேரறிஞர் அண்ணாதுரை போன்றோரின் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றைத் தன் வாழ்வில் பின்பற்றிவந்துள்ளார். திருமலை மாவட்டத்தில் திருக்கோணமலை என புலம்பெயர்ந்து பல இன்னல் இடர்களை அடைந்து மட்டக்களப்பு அமிர்தகழியிலே நிரந்தரமாக வாழ்வமைத்துக் கொண்டிருந்தவரை காலச்சூழ்நிலை ஒரு கட்டத்தில் சிறையிலும் தள்ளியது. அங்கிருந்து சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்ட கையோடு இ.போ.ச.சபையில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஓர் பஸ் சாரதியாக இணைந்து பொறளை, தலங்கமை, பதுளை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, வாழைச்சேனையென 32 வருடங்கள் சேவை செய்து இளைப்பாறினார். இந்நூலில் ப.குணசேகரன், கவிஞர் ஆ.மு.சி. வேலழகன் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்