16937 தமிழொளி : வன்னியூர்க் கவிராயர் சிலை திறப்புவிழா மலர்.

கனகரவி (மலராசிரியர்). வவுனியா: வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, 2015. (வவுனியா: லேற்றஸ் பிறின்டர்ஸ், வைரவபுளியங்குளம்).

xvi, 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20சமீ., ISBN: 978-955-7821-01-6.

வவுனியா மாவட்டத்தின் வெண்கலச்செட்டிகுளம் கிழக்குப் பிரதேசத்தில் இலுப்பைக் குளம் என்ற கிராமத்தைத் தாயகமாகக் கொண்ட “வன்னியூர்க் கவிராயர்” என்று பரவலாக அறியப்பட்ட அமரர் எஸ்.எல்.சவுந்தரநாயகம் அவர்கள், எஸ்.எல்.சவுந்தரநாயகம், வன்னியூர்க் கவிராயர், எஸ்.எல்.எஸ்., பாவேந்தன், மனோகரி, வன்னியூர் நாயகம் ஆகிய பல்வெறு புனைபெயர்களில் 1953 முதல் 1978வரை அவர் தீவிரமாக எழுதிவந்துள்ளார். ஆயுர்வேத வைத்தியரான இவர் ஓலைச்சுவடிகளிலும் சித்த மருத்துவத்துறை சார்ந்த ஆக்கங்களை எழுதியுள்ளார் என அறியமுடிகின்றது. மேலும் சித்திரக் கவிகள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பன இவரால் எழுதப்பட்டுள்ளன. இச்சிறப்பு மலரில் வன்னியூர்க் கவிராயர் (பிறப்பு: 04.04.1921 மறைவு: 1978) பற்றிய பல்வேறு தகவல்கள் சிறு கட்டுரைகளின் வடிவில் தரப்பட்டுள்ளன. கவிஞரின் சில ஆக்கங்களும் தேடித் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் பிறந்த கிராமத்திலேயே அவருக்குச் சிலை வைக்கப்பட்டவேளை 20.06.2015 அன்று இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

5 Better Casinos on the internet

Posts Top ten Best No deposit Online slots To try out The real deal Money Real cash Gambling enterprises #3: Playstar Online casino Perform The