16938 நெடுவாழ்வின் எழுதித் தீரா நினைவு: டொமினிக் ஜீவா.

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ். ஹட்டன்: பாக்யா பதிப்பகம், இல. 4A, ஸ்டார் சதுக்கம், 1வது பதிப்பு, ஜீன் 2021. (கொழும்பு 13: GOD Creative Lab).

x, 210 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5888-00-9.

இலக்கிய வழிவந்த அரசியல் சமூக ஆளுமையான டொமினிக் ஜீவா மறைந்ததை அடுத்து வரும் அவரது பிறந்த நாளில் அவருக்கான அஞ்சலியாக, அவரை நினைவுறுத்துவதாக, அவரை கௌரவிப்பதாக இச்சிறப்பு மலர் வெளிவந்துள்ளது. பிரான்ஸில் இருந்து இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியும், இலங்கை-மலையகத்திலிருந்து பாக்யா பதிப்பகத்தின் அதிபர் மல்லியப்புசந்தி திலகரும் இணைந்து இம்மலரை மலரும் நினைவுகளுடன் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளனர். டொமினிக் ஜீவா (27.06.1927- 28.01.2021) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், இதழாசிரியர். இவரது தந்தை ஆவுறம்பிள்ளை தாய் யோசப் மரியம்மா. இவர் மல்லிகை என்னும் சஞ்சிகையின் ஆசிரியராவார். புரட்சிமோகன் என்ற புனைபெயரில் ஆக்கங்களைப் படைத்துள்ளார். இவர் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அனுபவ முத்திரைகள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம், நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களையும் UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY என்ற மொழிபெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Cleopatra Gold

Content Análisis De su Tragamonedas De balde Cleopatra: Hipervínculo Sobre cómo Juguetear A las Tragamonedas De balde Rangos De Apuestas Sobre Otras Casinos Cotas Sobre

12946 – சோமாஸ்கந்தம் நினைவுமலர் 2003.10.26.

மலர்க் குழு. உடப்பு: நவ இளங்கதிர் நாடக மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x 15 சமீ. தனது வில்லிசை