பாகீரதி கணேசதுரை, சிவமலர் சுந்தரபாரதி (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: சோலைக்குயில் அவைக்காற்றுக் களம், 1வது பதிப்பு, நவம்பர் 2020. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).
viii, 167 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 700., அளவு: 25×19 சமீ., ISBN: 978-624-5407-00-2.
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத் தலைவர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் அகவை எழுபது நிறைவு மலர். இம்மலரில் திருமதி கோகிலா மகேந்திரன் தொடர்பான எழுத்தாளர்களின் தொடர்பாடல்கள், அவருடைய மாணவர்களின் கருத்துக்கள், அவரது ஆக்கங்கள் தொடர்பான விமர்சனங்கள், பாடசாலைச் சம்பவப் பதிவேட்டுக் குறிப்பு, நாடக எழுத்தாக்கம், உளவியற் சிறுகதை, தொடர் நவீனம், சிறுவர் கதை, கவிதை, இசைப்பாடல், டயறித் தொகுப்பு, உறவினர் பற்றிய நினைவாடல், கட்டுரைகள், திருமதி கோகிலா மகேந்திரன் எழுதிய விமர்சனங்கள், விருந்தினர் உரைச் சுருக்கம், அதிபராகப் பரிசளிப்பு விழாவின் அறிக்கை, 2015இல்அகவை அறுபத்தைந்து நிறைவு மலரான விழிசைக் குயிலிலும், 2010 அகவை அறுபது நிறைவு மலரான சோலைக் குயிலிலும் வெளிவராத அவரின் நிறைவான செயற்பாடுகள் என்பவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார்கள்.