16940 பூச்சியம் பூச்சியமல்ல : இலக்கிய அனுபவங்கள்.

தெணியான். சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (சென்னை 600014: பாவை பிரின்டர்ஸ், 16(142), ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை).

vi, 210 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-81-2342-462-0.

தெணியானின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாகக் கணிக்கத்தக்க அனுபவப் பதிவுகள் இவை. 1960 முதல் தான் பேணிவந்த தினக்குறிப்புகளின் உதவியுடன் ஒவ்வொரு நிகழ்வினையும் திகதிவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். தான் சமூக ஒடுக்குமுறைகளுக்குள்ளான அனுபவங்கள், அந்த ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து நின்று பெற்ற அனுபவங்கள், அவற்றுக்கு எதிராகப் போராடிப் பெற்ற அனுபவங்கள் எனப் பல அனுபவங்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் மனப்பாங்கு தன்னுள்ளே வளர்ந்து வருவதற்குக் காரணமாக அமைந்த தனது குடும்ப, வாழ்வியல் பின்புலத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

12216 – நிவேதினி: பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை: இதழ் 9 மலர் 2 (ஆனி 2004).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆனி 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 83