16941 மன்னார் மாதோட்ட தமிழ்ப் புலவர் சரித்திரம்.

பெஞ்சமின் செல்வம். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxxviii, 86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7331-25-6.

திரு. பெஞ்சமின் செல்வம் (02.12.1906-22.01.1982) அவர்கள் 1978ஆம் அண்டு இந்நூலை மதலில் எழுதியிருந்தார். 1769 தொடக்கம்1976 வரையான 207 ஆண்டுக்காலப் பகுதியில்வாழ்ந்த மன்னார் மாதோட்டத்தைச் சேர்ந்த 51 புலவர்களின் வரலாற்றை இந்நூலில் அவர் பதிவுசெய்துள்ளார். இதில் 43 தமிழ் புலவர்களும் 8 இஸ்லாமியப் புலவர்களும் இடம்பெற்றுள்ளனர். லோறஞ்சுப்பிள்ளை, காலிங்கராயர், சந்தியோகுப் புலவர், கவிரிகேற் புலவர், ஆதித்த நாடார் பிலீப்பு சந்தான், மரியானுப் புலவர், குருகுல நாட்டுத் தேவர், வெள்ளைப் புலவர், மனுவேற்பிள்ளை உடையார், மரியாம்பிள்ளை விதானையார், கீத்தாம்பிள்ளைப் புலவர், குமாரசிங்க முதலியார், நீக்கிலாப்பிள்ளை, லோறஞ்சுப் புலவர், வெலிச்சோர்ப்பிள்ளை அதிகாரம், வருணகுலசிங்கம் தொன்சுவாம் அந்தோனிப் புலவர், அந்தோனி பிலிப்பு நேரிசு, மனுவேல் மொறாயஸ், ஆனுப்பிள்ளை, மரிசாற்பிள்ளை, சீனிப்புலவர், சூசைப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, செபமாலைப் புலவர், மரிசாற் புலவர், ஆரோக்கியம் டயஸ், அந்தோனிப் புலவர், கவிரிகேற் புலவர், சந்தான் புலவர், நிக்கிலான் புலவர், மரிசால் சூசைப் புலவர், அந்தோனி கிறிஸ்தோகுப் புலவர், பேதிரு மிகேல் பிறஞ்சி, சூசை மனுவேற் புலவர், அந்தோனி கிறிஸ்தோகுப் புலவர், பிலீப்பு சக்கரவர்த்தி, செவஸ்தியாம்பிள்ளை, சூசைப் புலவர், அந்தோனிப் புலவர், சந்தான புலவர், ஆரோக்கியம் றோச், சதக்குத் தம்பிப் புலவர், முகம்மது சரீபு, பிறஞ்சிக்குடிப் புலவர், விதானைப் புலவர், பக்கீர்ப் புலவர், நெயினா முகம்மது புலவர், முகையதீன் சாஹிபுப் புலவர், கிதிரு முகம்மது மரைக்காயம் புலவர், முகம்மது சமாலுத்தீன் புலவர், கவுரியேற் புலவர் ஆகிய புலவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் அவர்களது பாடல்கள் சிலவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

kasino verkossa Kazakstan

Casino online Nettikasino Kasino verkossa Kazakstan Kuna Trustlyl on olemas eraldi pangalingid nii SEB pangal, Swedbankil kui ka LHV pangal on see hea alus loomaks