16942 மாமி சொன்ன கதைகள் : அனுபவப் பகிர்வு.

சந்திரா இரவீந்திரன் (இயற்பெயர்: சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, டிசம்பர் 2022. (நாகர்கோயில்: பிரின்ட் பொயின்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்).

120 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5523-262-5.

பருத்தித்துறை-ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளரான சந்திரா இரவீந்திரன் எண்பதுகளிலிருந்து இலக்கிய உலகில் இயங்கி வருபவர். பலராலும் அறியப்பட்ட தனித்துவமான மொழிநடை கொண்ட பல சிறந்த சிறுகதைகளைத் தந்தவர். 1991 முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார். தனது மாமியின் அனுபவங்களை, அவருக்குள் இருந்த உணர்வுகள் சிறிதும் குறையாமல் இங்கே இலக்கியமாக்கியிருக்கிறார். நானும் மாமியும், மாமி சொன்னவை பால்யம், பள்ளிக்காலப் புதினங்கள், கற்பித்தலுக்குக் கைகொடுத்தல், ஊரும் கொண்டாட்டமும், வாழ்வில் திடீர் மாற்றங்கள், மேலும் படிக்க ஆசை, ஐயா போன பின்னர், அது ஒரு காலம், எனது ஆசைகளும் என் அம்மாவும், பருவப் பெண்ணும் பள்ளிக்கூடமும், வீடும் நானும், மீண்டும் படிப்பு, காதலும் வாழ்வும், சிங்களத் தனிச்சட்டமும் வாழ்வின் மாற்றங்களும், கணவர் இல்லாத வாழ்வு, நாடும் சூழலும், நானும் வெளிநாடும், புலம்பெயர்ந்த வாழ்வு, மாமியைப் பற்றி மற்றவர்கள் ஆகிய 20 இயல்களில் இவரது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு கட்டம் இந்நூலில் நினைவுப் பதிகையாக சுவையாக படைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14973 மாவை சேனாதிராசாவின் மறைக்கப்பட்ட மறுபக்கம்.

வீ.ஆனந்தசங்கரி. யாழ்ப்பாணம்: வீ.ஆனந்தசங்கரி, தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி, செல்வா அகம், 58/4, ஸ்டான்லி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13