16944 வாழ்நாள் சாதனையாளர்: சாஹித்ய ரத்னா செங்கை ஆழியான்.

கமலா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10A, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

x, 786 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 2000., அளவு: 25.5×17.5 சமீ., ISBN: 978-955-0210-11-4.

செங்கை ஆழியான் (க.குணராசா, 25.01.1941-28.02.2016) பற்றிய இவ்வாவணத் தொகுப்பு அவரது துணைவியார் திருமதி கமலா குணராசாவின் மூலம் தொகுக்கப்பெற்றுள்ளது. இத்தொகுப்பு கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ்திரட்டித் தரப்பட்டுள்ளது. செங்கை ஆழியானின் வாழ்க்கைப் பாதை, நாவல்கள், சிறுகதைகள், செங்கை ஆழியான் பற்றிய ஆய்வுகள், சிறுகதைத் தொகுதிகள், பல்சுவை நூல்கள், செங்கை ஆழியானால் தொகுக்கப்பட்ட ஏனைய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுதிகள், வரலாற்று நூல்கள், பாட நூல்கள், செங்கை ஆழியானின் ஏனைய துறைகள், நேர்காணல், செங்கை ஆழியான் பெற்ற பரிசுகள், விமர்சனங்கள், செங்கை ஆழியான் பற்றிய ஏனையோரின் கூற்றுகள், செங்கை ஆழியானை வாழ்த்திய வாழ்த்துப் பாக்கள், எனது இலக்கியத் தொகுப்புகள்- செங்கை ஆழியான், செங்கை ஆழியானின் இலக்கியம், அறிவியல், புவியியல், வரலாற்றுக் கட்டுரைகள், செங்கை ஆழியானின் சமய சமூகப் பணிகள், சாதனையாளனின் பட்டங்களும் விருதுகளும், செங்கை ஆழியானுக்கு கிடைக்கப்பெற்ற சான்றிதழ்கள், சுயசரிதை, செங்கை ஆழியான் நூல்களின் அட்டைப் படங்கள், செங்கை ஆழியான் மறைவுக்குப் பின்னர் வெளிவந்தவை, பிற்சேர்க்கைகள், செங்கை ஆழியானின் சுயவிபரக்கோவை, கலாநிதி கந்தையா குணராசா அவர்கள் பெற்றுக்கொண்ட விருதுகள், கலாநிதி கந்தையா குணராசா அவர்களின் நிழற்படங்கள்.

ஏனைய பதிவுகள்

Nfl Betting Informed me

Content Best football betting tips free – In which Do i need to Find the best Score And Possibility? Have there been More Wagers To