16947 பிரஞ்சுப் புரட்சி.

க.வாசுதேவன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, 340, செட்டியார் தெரு, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

545 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 19×11.5 சமீ., ISBN: 978-955-9396-85-7.

ஒரு இனம் தன் அடையாளம், தன் தனித்துவம் மற்றும் தனது இறைமை மீதான அறிவியல்ரீதியான பிரக்ஞை கொண்டதால் வெடித்தது தான் பிரஞ்சுப் புரட்சியாகும். யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? எனும் கேள்விகளுக்கப்பால், இப்புரட்சி மானிட வரலாற்றின் அரசியல் அத்திவாரமான ஒரு நிகழ்வென்பது எவரும் மறக்கமுடியாத ஒன்றாகும். 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் தோற்றம்பெற்ற அனைத்து அரசியற் கோட்பாடுகளினதும் தாய்நிலம் பிரஞ்சுப் புரட்சியே என்றால் அது மிகையாகாது. எழுத்தாளர் வாசுதேவன் இந்நூலில் பிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றை இரண்டு பாகங்களாக வகுத்திருக்கிறார். மூன்றாவதாக ஒரு பின்னிணைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.  முதலாவது பகுதியில் புரட்சியின் ஆரம்பச் சூழ்நிலைகள் மற்றும் அதன் தோற்றம் பற்றியும் விபரித்து அரசனின் தப்பியோடல் வரைக்குமான விடயங்களைப் பதிவுசெய்கின்றார். இரண்டாவது பகுதியில் குடியரசின் உருவாக்கம் தொடங்கியதையும் பின்னர் அது உறுதிப் படுத்தப்படுவதற்கான புரட்சியின் பல்வேறுபட்ட அசைவுகளையும் அதன் இடர்களையும் விபரித்துள்ளார் மூன்றாவதாக றொபெஸ்பியரின் வீழ்ச்சியையடுத்த பரட்சியின் தளர்வு நிலையையும் பிற்போக்குவாத அரசியற் செயற்பாடுகளையும் அதையடுத்த அரசியற் சம்பவங்களையும் இந்நூலின் இறுதிப் பகுதியில் பதிவுசெய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Slot Demo Komplit

Content Nuts Jack 81 | frozen diamonds slot online casino Seven Gambling establishment 100 percent free Slot Game Da Vinci Expensive diamonds On line Slot